7 ஆண்டு கழித்து உயிர் நண்பனை சந்திக்க சொந்த ஊர் சென்ற சூரிக்கு காத்திருந்த அதிர்ச்சி.

By Rajkumar · 9/3/2020

தமிழ் சினிமா உலகில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சூரி. இவர் 1999 ஆம் ஆண்டு வெளி வந்த நினைவிருக்கும் வரை என்ற படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால், இவர் 2009 ஆம் ஆண்டு வெளி வந்த வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் வரும் ஒரு பரோட்டா காமெடி காட்சியின் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலமானர். அதனால் இவரை இன்று வரை பரோட்டா சூரி என்று தான் அழைக்கிறார்கள். அதனை தொடர்ந்து நடிகர் சூரி அவர்கள் பல படங்களில் நடித்து வருகிறார்.

கடந்த ஆண்டு சூரி, தீபாவளி பண்டிகையை தனது சொந்த ஊரில் கொண்டாடினர். இந்த நிகழ்ச்சிக்கு சன் தொலைக்காட்சியில் '' என்ற பெயரில் ஒளிபரப்பானது. அப்போது சூரி, தனது நெருங்கிய நண்பர் இறப்பு குறித்து பேசி இருந்தார். அதில், தான் சினிமாவில் இருந்த காலத்தில் என்னால் பெரிய அளவில் சாதிக்க முடியாமல் இருந்த காலத்தில் 7 வருடங்கள் கழித்து நான் சொந்த ஊருக்கு வந்தேன். அப்போது என்னுடைய நண்பர் திவாகரை சந்திக்க வேண்டும் என்று என் நண்பர் ஒருவரிடம் கூறினேன் ஆனால், அவர் இருந்து விட்டான் என்று சொன்னான். அது எனக்கு மிகப்பெரிய ஒரு இழப்பு. அது என்னுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட மிகப்பெரிய அதிர்ச்சி.

இதையும் பாருங்க சமுத்திரம் பட நடிகை காவேரி தற்போது என்ன செய்கிறார் தெரியுமா ? செம மாஸ் அவதாரம்.

மேலும், வடிவேலு, சந்தானத்திற்கு பிறகு தமிழ் சினிமா உலகில் பிரபலமான காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். தமிழில் விஜய், அஜித், சூர்யா என்று பல்வேறு முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து உள்ளார் சூரி. சமீப காலமாகவே நடிகர் சூரி அவர்களின் படம் மிகப் பெரிய அளவில் ரீச் ஆகவில்லை. இதனாலே நடிகர் சூரி அவர்கள் தற்போது மிகவும் தெளிவாக கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். தற்போது இரா. சரவணன் இயக்கத்தில் நடிகை ஜோதிகா இன்னும் பல நடிகர்கள் நடித்து வரும் பெயரிடாத படத்தில் நடிகர் சூரி நடித்து வருகிறார்.

வீடியோவில் 10 நிமிடத்தில் பார்க்கவும்

https://www.youtube.com/watch?v=QzZ7O2eebjo&feature=youtu.be

தற்போது நடிகர் சூரி அவர்கள் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை ஆர்.எஸ்.இன்போடெயிண்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் கதை நடிகர் சூரி வழக்கமாக நடிக்கும் காமெடி சப்ஜெக்ட் போன்று இல்லாமல் சீரியஸான கதைகளத்தை கொண்டது. மதுரையை மையமாக கொண்ட கதையில் நடிகர் சூரி நடுத்தர குடும்பத்தை சேர்ந்த இளைஞனாக நடிக்கவிருக்கிறார். இந்த படம் குறித்த தகவல்கள் கூடிய விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது

Tamil Behind Talkies AMP · Quick view
View full