சமுத்திரம் பட நடிகை காவேரி தற்போது என்ன செய்கிறார் தெரியுமா ? செம மாஸ் அவதாரம்.

0
30731
kaveri
- Advertisement -

நடிகர் சரத் குமார் முரளி நடித்த சமுத்திரம் படத்தில் அவர்களின் பாச தங்கையாக நடித்தவர் மலையாள நடிகை காவேரி.கேரளாவில் பிறந்த இவர் 1988 ஆம் ஆண்டு கேரள சினிமாவில் நடிக்க துவங்கினார். அதன் பின்னர் மலையாளத்தில் பல பெற்றிப்படங்களில் நடித்து மலையாள சினிமாவில் எண்ணற்ற பரிசுகளை வாங்கினார். இவருடைய நேரடி முதல் படம் 1990 இல் பிரசாந்த் நடிப்பில் வெளியான வைகாசி பிறந்தாச்சி என்ற படம் தான்.அந்த படத்திற்கு பின்னர் விக்ரம் நடித்த காசி படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்தார்.

-விளம்பரம்-
actor-surya-kiran

- Advertisement -

பின்னர் பார்த்திபன் நடித்த மெரிகுறி பூக்கள் படத்தில் கதானாயகியக நடித்தார். மேலும், விஜய் மற்றும் ஷாலினி நடிப்பில் வெளியான கண்ணுக்குள் நிலவு என்ற படத்திலும் நடித்திருந்தார் காவேரி. மலையாள சினிமாவில் பல படங்களில் ஹீரோயினியாக நடித்தாலும் தமிழில் இவர் ஹீரோயினியாக வலம் வலம்வரவில்லை. இருப்பினும் சன் டிவியில் தியாகம் என்ற சீரியலில் நடித்தார். இவர் கணவர் படிக்காதவன் படத்தில் குட்டி ரஜினியாக நடித்தவர்.

இவர் மலையாள இயக்குனர் சூர்யா கிரண் கல்யாண் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் 2016 ஆண்டு இவர்கள் இருவருக்கும் விவாகரத்து ஏற்பட்டுவிட்டது. இருப்பினும் தொடர்ந்து மலையாள திரைப்படங்களில் நடித்து வந்தார். இந்த நிலையில் தற்போது காவேரி திரைப்பட இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் களமிறங்க இருக்கிறார் . ஆம், நடிகை காவேரி தற்போது ஒரு புதிய மலையாள படத்தை இயக்கி வருகிறார்.

-விளம்பரம்-
Image result for Chethan Cheenu

ரொமான்டிக் சைக்கோ லாஜிக் திரைப்படமாக இந்த படத்தை நடிகை காவேரி இயக்கி இருக்கிறாராம். இந்த படத்தில் பிரபல மலையாள நடிகர் சேட்டன் சீனு என்பவர் கதாநாயகனாக நடித்துள்ளார். இவர் விஷால் நடிப்பில் வெளியான நான் சிகப்பு மனிதன் படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் இனியாவின் கள்ளக்காதலன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று பிரபல தமிழ் பட இயக்குனர் கௌதம் மேனன் வெளியிட இருக்கிறாராம்.

Advertisement