தீபாவளி அன்றே மகனின் பிறந்தநாள். விஸ்வாசம் பாடலுடன் குயூட் வீடியோவை வெளியிட்ட சூரி.

By Rajkumar · 28/10/2019

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான காமெடி நடிகரான சூரி சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து தற்போது விவேக், சந்தானம் அளவிற்கு காமெடியில் சிறந்து விளங்கி வருகிறார். காமெடியில் வடிவேலுக்கு பாடி லங்குவெஜ், சந்தானம் என்றால் கலாய்ப்பது என்று நாம் அனைவரும் அறிவோம். அதுபோல சூரி ஆங்கிலத்தில் அடிக்கடி பிழையாக பேசும் ஒரு புது யுத்தியை பயன்படுத்து காமெடியில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துள்ளார். அதை வைத்துகொண்டே இது வரை பல படங்களில் இவரது காமெடியை ஹிட் அடிக்க வைத்துள்ளார்.

தமிழில் உள்ள பெரும்பான்மையான நடிகர்களின் படத்தில் காமெடி நடிகராக நடித்துவிட்டார் சூரி. ஆனால், சமீப காலமாக இவரது காமெடி மக்களுக்கு சலிப்பையே ஏற்படுத்தி வருகிறது, இருப்பினும் வரிசையாக பட வாய்ப்புகளை கையில் வைத்திருக்கிறார் நடிகர் சூரி. இறுதியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான நம்ம வீட்டு பிள்ளை படத்தில் நடித்திருந்தார் சூரி. ஆனால், அந்த படத்திலும் சூரியின் காமெடி அவ்வளவாவக எடுபடவில்லை. நடிகர் சூரி ஒரு முன்னணி காமெடியனாக வளம் வருவதற்கு முன்பாக சிறு சிறு கதாபாத்திரத்தில் முகம் காண்பித்து வந்தார்.

இதையும் பாருங்க : ராயப்பனை மட்டும் வைத்து ஒரு படம். ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அட்லீ.

பிரபு தேவா நடித்த 'நினைவிருக்கும் வரை ' ,'ஜேம்ஸ் பாண்டு' தீபாவளி போன்ற படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சூரி. மேலும், சினிமாவில் வருவதற்கு முன்பாக திருமதி செல்வம், புஷ்பாஞ்சலி, மைதிலி, ஜென்மம் எக்ஸ் போன்ற பல சீரியல்களில் கூட நடித்துள்ளார் சூரி. நடிகர் சூரி 20 வருடங்களுக்கு முன் சூரி, காமெடி கிங் கௌண்டமணி படத்தில் ஒரு சிறு காட்சியில் நடித்துள்ளார். தமிழில் கடந்த 2000 ஆம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் கார்த்தி, மந்த்ரா, செந்தில் கௌண்டமணி போன்ற பலர் நடித்த 'கண்ணன்' வருவான் என்ற படத்தில் தான் நடிகர் சூரி ஒரு சிறு காட்சியில் நடித்துள்ளார்.

https://twitter.com/sooriofficial/status/1188359488811614208

நடிகர் சூரிக்கு சில ஆண்டுகளுக்கு முன்னரே திருமணம் ஆகிவிட்டது. திருமணத்திற்கு பிறகு இவருக்கு ஒரு மகளும் மற்றும் ஒரு மகனும் பிறந்தனர். பெரும்பாலும் சூரி பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றாலும் அவரது குடும்ப நபர்கல் யாரையும் அழைத்து வருவது இல்லை. கடந்த ஆக்ஸ்ட் மாதம் சூரி தனது பிறந்தநாளை கொண்டாடி இருந்தார். அப்போது தனது மகள் மற்றும் மகன் தனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்திருந்த புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார் சூரி.

இந்த நிலையில் நடிகர் சூரியின் இளைய மகன், நேற்று தீபாவளி பண்டிகையின் போதே தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். தனது மகனின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள சூரி, விஸ்வாசம் படத்தில் வரும் கண்ணான கண்ணே பாடளுடன் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார் சூரி. இந்த வீடியோவை கண்ட பலரும் சூரியின் மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும், இந்த வீடியோ தற்போது வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. நடிகர் சூரி தற்போது விஜய் சேதுபதி நடித்து வரும் சங்கத் தமிழன் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full