ராயப்பனை மட்டும் வைத்து ஒரு படம். ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அட்லீ.

0
76188
bigil-rayappan
- Advertisement -

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள பிகில் படம் உலகம் முழுவதும் பட்டைய கிளப்புகிறது. விஜய் ரசிகர்கள் “பிகில்” படம் திரையரங்குகளில் வெளியானதை தொடர்ந்து திருவிழா போன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறார்கள். இதனைத்தொடர்ந்து இயக்குனர் அட்லியும், விஜய்யும் இந்தப் படத்தில் மூன்றாவது முறையாக இணைகிறார்கள். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து உள்ளார். இவர்களோடு விவேக், கதிர், ஜாக்கி ஷெராப், டேனியல் பாலாஜி, ஆனந்த்ராஜ், யோகிபாபு ஆகிய பல நடிகர்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் பிரம்மாண்டமான பொருட்செலவில் பிகில் படத்தை தயாரித்து உள்ளார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்தே. பிகில் படம் 180 கோடி ரூபாய்க்கு மேல் தயாராகி இருக்கும் படம் என்று கூறப்படுகிறது.

-விளம்பரம்-

மேலும்,ஏ.ஆர். ரகுமான் அவர்கள் இசையமைத்துள்ளார். இந்த பிகில் படம் முழுக்க முழுக்க பெண்களின் ‘கால் பந்தாட்டத்தை’ மையமாக வைத்து எடுக்கப்பட்ட படமாகும். அதுமட்டும் இல்லாமல் தளபதி விஜயின் பிகில் படம் ஷூட்டிங் தொடங்கிய நாளிலிருந்தே திரைக்கு வரும் நாள் வரை பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி இருந்த நிலையில் பிகில் படம் தியேட்டர்களில் வெற்றிகரமாக வெளிவந்து தெறிக்க விடுகிறது. பிகில் படம் திரையரங்குகளில் வெளியானதை தொடர்ந்து சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் பிகில் படம் குறித்து கருத்துகளை பதிவிட்டு தெரிவித்து வருகின்றனர். மேலும்,நம்ம தளபதி அவர்கள் இந்த தீபாவளிக்கு பிகில் படம் மூலம் சரவெடிய போட்டு ரசிகர்களை வெறித்தனமாகி உள்ளார் என்பது தெளிவாக தெரிகிறது.

இதையும் பாருங்க : சுஜித்தை காப்பற்ற போராடுவதை கிண்டல் செய்த நபர், இப்படியும் ஒருவர் இருப்பாரா ?

- Advertisement -

மேலும்,விஜய்யின் பிகில் படம் ப்ளாக் பஸ்டர் படமாக இருக்கிறது.மேலும், பிகில் படம் குறித்து கலவையான விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர் ரசிகர்கள். அதோடு பிகில் படம் பெரிய அளவு மாஸ் படமாக இருந்தாலும் அந்த படத்தில் சின்னச் சின்ன குறைகள் இருப்பதாகவும், கதையின் மீது ஒரு பிணைப்பு ஏற்படுத்தாமல் போய்க் கொண்டுள்ளது என்றும் கூறினார்கள். ஆனால்,எமோஷன் காட்சிகள் படத்தில் பட்டையை கிளப்பியது என்று கூறினார்கள். இதனை தொடர்ந்து பிகில் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், பிகில் படத்தில் அப்பா ‘ராயப்பன்’ ஒரு லோக்கல் ரவுடி. அவருடைய ஏரியா பகுதியில் உள்ள மக்களுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார். மக்களின் நல விஷயத்தில் நிறைய கவனமும் அக்கறையும் கொண்டு வரும் கதாபாத்திரம். அவருடைய மகன் மைக்கேல். ராயப்பன் அப்பாவிற்கு கால்பந்து விளையாட்டில் மைக்கேல் எப்படியாவது கப் ஜெயிச்சி கொடுக்கனும் என்றும், நம்ம ஏரியா இனத்துக்கும் நல்ல பெயரை வாங்கித் தரனும் என்றும் எப்பவுமே சொல்லிட்டே இருப்பார். பிகில் படம் முழுக்க முழுக்க பட்டையை கிளப்பியதற்கு காரணம் ராயப்பன் கதாப்பாத்திரம் தான்.

கதையே அவரிடம் இருந்து தான் தொடங்குகிறது என்று கூட சொல்லலாம். தந்தை ராயப்பன் ஆசையும் நம்பிக்கையும் தான் மைக்கேல் கால்பந்தாட்டத்தில் கோச்சாக மாறி வெற்றி அடைவதற்கு காரணம். இதனை தொடர்ந்து ரசிகர்கள் அனைவரும் ராயப்பன் கதாபாத்திரத்திற்கு “ராயல் சல்யூட்” என்று சொல்லி பாராட்டியும் வாழ்த்தும் தெரிவித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து ரசிகர்கள் இயக்குனர் அட்லி இடம் ராயப்பன் கதாபாத்திரத்தை மட்டும் வைத்து கதை எடுப்பீர்களா! என்று கேட்டார்கள். உடனே அட்லி பிகில் படத்தில் விஜய் சொன்னது போலவே செய்திடலாம் என சிரித்துக்கொண்டே சொன்னார். அப்ப கூடிய விரைவில் ராயப்பன் கதாபாத்திரம் வைத்து அட்லீ படம் இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-விளம்பரம்-
Advertisement