பள்ளிக்கு சென்ற சிறுமியிடம் காரில் இருந்தபடி இப்படி ஒரு கேவலத்தை செய்த கும்கி பட நடிகர் - போக்சோ சட்டத்தில் கைதி.

By Arun · 7/7/2022

கும்கி பட நடிகர் போக்சோ சட்டத்தில் கைதாகி இருக்கும் சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகராக திகழ்பவர் ஸ்ரீஜித் ரவி. இவர் கேரளா மாநிலம் திரிச்சூரை சேர்ந்தவர். இவர் 2005-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான மாயகோஹம் என்ற படத்தின் மூலம் தான் திரைத்துறையில் அறிமுகமாகி இருந்தார். அதை தொடர்ந்து இவர் மலையாளத்தில் பல முனனணி நடிகர்களுடன் இணைந்து நடித்து இருக்கிறார்.

பின் 2012-ம் ஆண்டு தமிழில் இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான ‘கும்கி’ திரைப்படத்தில் வன அதிகாரி வேடத்தில் நடித்து தமிழில் அறிமுகமாகி இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. அதன்பிறகு ஆர்யா மாதவன் இணைந்து நடித்த வேட்டை படத்தில் நடித்து இருந்தார். பின் விஷாலின் ‘கதகளி’ மற்றும் கதிரின் ‘மத யானை கூட்டம்’ , அசுரவதம், ஆயிரத்தில் இருவர் உள்ளிட்ட பல படங்களில் ஸ்ரீஜித் ரவி நடித்து இருக்கிறார்.

இதையும் பாருங்க : தமிழகத்தில் பல ஹோட்டல் கிளைகள், அடுத்தடுத்து பட வாய்ப்புகள் - சூரியின் மொத்த சொத்து மதிப்பு எவ்ளோ தெரியுமா ?

ஸ்ரீஜித் ரவி திரைப்பயணம்:

பெரும்பாலும் இவர் படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சமீபத்தில் இவர் ‘கள்ளன் டி சோசா’ உட்பட பல மலையாள படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார். இந்நிலையில் இவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸ் கைது செய்துள்ள சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சை கிளப்பி இருக்கிறது.

கேரளாவில் நடந்த சம்பவம்:

அதாவது, கடந்த சில தினங்களுக்கு முன்பு கேரள மாநிலம் திருச்சூர் அய்யந்தோளில் உள்ள எஸ்.என்.பார்க்கின் அருகே காரில் வந்த ஒருவர் குழந்தைகள் முன் நிர்வாணமாக காட்சி அளித்ததாக கூறப்பட்டது. ஆனால், அந்த நபரின் பெயரை குழந்தைகளால் குறிப்பிட முடியவில்லை. இது குறித்து குழந்தைகளின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்தனர். பின் அந்த பகுதியில் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர்.

போக்சோ சட்டத்தின் கீழ் கைதான நடிகர்:

இதை தொடர்ந்து சம்பந்தபட்ட நபரின் கார் கண்டுபிடிக்கப்பட்டு குற்றவாளி அடையாளம் காணப்பட்டார். அந்த நபர் நடிகர் ஸ்ரீஜித் ரவி ஆவார். இதை தொடர்ந்து போலீசார் குழந்தைகளிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட ஸ்ரீஜித் ரவியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். ஆனால், இதற்கிடையே ஸ்ரீஜித் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு சிகிச்சை பெறுவதாகவும் தெரிவித்திருக்கிறார்.

குழந்தைகளிடம் ஸ்ரீஜித் செய்த காரியம்:

அதுமட்டும் இல்லாமல் 2016 ஆம் ஆண்டில் மாணவர்கள் குழு ஒன்று தங்கள் பள்ளிக்கு நடந்து சென்றபோது காருக்குள் நிர்வாணம் காட்டியதற்காக பாலக்காடு போலீசாரல் ஸ்ரீஜித்தை கைது செய்து இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பள்ளி செல்லும் குழந்தைகளுடன் புகைப்படம் எடுக்கவும் அவர் முயன்றதாக கூறப்படுகிறது. தற்போது இந்த தகவல் சோஷியல் மீடியாவில் வைரலானது தொடர்ந்து பலரும் நடிகர் ஸ்ரீஜித்துக்கு எதிராக கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full