தமிழகத்தில் பல ஹோட்டல் கிளைகள், அடுத்தடுத்து பட வாய்ப்புகள் – சூரியின் மொத்த சொத்து மதிப்பு எவ்ளோ தெரியுமா ?

0
679
soori
- Advertisement -

நடிகர் சூரியின் சொத்து மதிப்பு குறித்த விவரம் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பது சூரி. இவர் சின்னத்திரை சீரியலில் தனது பயணத்தை துவங்கி தற்போது தமிழ் சினிமா உலகில் முன்னணி காமெடி நடிகராக விளங்கி வருகிறார். இவர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்த ‘வெண்ணிலா கபடி குழு’ என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகி இருந்தார்.

-விளம்பரம்-

இந்த படத்தில் இருந்து இவரை பலரும் பரோட்டா சூரி என்று தான் செல்லமாக அலைகிறார்கள். மேலும், ஆரம்பத்தில் சூரி சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தாலும் தற்போது விவேக், சந்தானம் அளவிற்கு காமெடியில் சிறந்து விளங்கி வருகிறார். காமெடியில் வடிவேலுக்கு பாடி லாங்குவேஜ், சந்தானம் என்றால் கலாய்ப்பது என்று நாம் அனைவரும் அறிவோம். அதுபோல சூரி ஆங்கிலத்தில் அடிக்கடி பிழையாக பேசும் ஒரு புது யுத்தியை பயன்படுத்தி காமெடியில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

- Advertisement -

இதையும் பாருங்க : நான்கு நபர்களில் ஒரு தலித்தும் அடங்கும் – Mp நியமன அறிக்கையில் இளையராஜாவின் சாதியை குறிப்பிட்டு இருப்பதாக நெட்டிசன்கள் குற்றச்சாட்டு.

சூரியின் திரைப்பயணம்:

மேலும், இவர் தமிழில் உள்ள முன்னணி நடிகர்களான ரஜினி, விஜய், அஜித், சூர்யா என்று பல்வேறு நடிகர்களின் படத்தில் காமெடி நடிகராக நடித்து இருக்கிறார். சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற படம் எதற்கும் துணிந்தவன். இந்த படத்தில் சூரி நடித்து இருக்கிறார். இந்த படத்தில் இவருடைய நகைச்சுவை ரசிகர்கள் மத்தியில் ரசிக்க வைத்து இருக்கிறது. அதனை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் டான் படத்திலும் இவருடைய காமெடி மக்கள் மத்தியில் வரவேற்கப்பட்டு இருக்கிறது.

-விளம்பரம்-

விடுதலை படம்:

இப்படி தொடர்ந்து காமெடி கதாபாத்திரத்தில் நடித்து வந்த சூரி தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இவர் இந்த படத்திற்காக படு பிட்டாக தன்னை மாற்றியுள்ளார். இந்த படத்திற்கு “விடுதலை” என பெயர் வைக்கப்பட்டுள்ளது. RS Infotainment தயாரிப்பாளர் எல்ரெட் குமார் இந்த படத்தை தயாரித்து வருகிறார். இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். மேலும், விடுதலை படத்தின் படப்பிடிப்பு சத்தியமங்கலத்தின் அடர்ந்த விடுதலை படமாக்கப்பட்டு வருகிறது.

பலருக்கு உதவி செய்யும் சூரி:

சமீபத்தில் வெளிவந்த படத்தின் போஸ்டர்களில் நடிகர் சூரி போலீஸ் அதிகாரியாகவும், விஜய் சேதுபதி கைதி போன்றும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், இந்த படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டு இருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து சூரி கைவசம் ஏகப்பட்ட படங்கள் இருக்கிறது. தற்போது இவர் தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். மேலும், நடிகர் சூரி அவர்கள் சினிமாவை தவிர நிஜ வாழ்க்கையிலும் உதவி என்று அவரை நாடி வரும் பலருக்கு பல உதவிகளை செய்து இருக்கிறார்.

சூரியின் முழு சொத்து மதிப்பு:

அந்த வகையில் அவரது சொந்த ஊரான மதுரையில் பல உணவகங்களை திறந்து குறைந்த விலையில் உணவு அளித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் சூரியின் முழு சொத்து மதிப்பு குறித்த விவரம் வெளியாகி இருக்கிறது. அதாவது, சூரியன் சொத்து மதிப்பு சுமார் 40 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. ஆனால், சினிமா வட்டாரங்கள் மத்தியில் இது தான் பேசப்பட்டு வருகிறது.

Advertisement