NGK என்றால் என்ன..? சூர்யாவின் கதாபாத்திரம் இதுதான்.! NGK பட ரகசியம் கசிந்தது

0
543
surya
- Advertisement -

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தின் நடிகர் சூர்யா “என்ஜிகே “என்ற படத்தில் நடித்து வருகிறார். சூர்யாவின் 36வது படமான இந்த படத்தில் நடிகைகள் சாய் பல்லவி, ராகுல் ப்ரீத் சிங் ஆகியோர் நடிக்கின்றனர். கடந்த ஆண்டு 2017 ஆம் ஆண்டு இந்த இந்த படத்தின் ஆரம்ப தகவல்கள் வெளியாகின.

njk

இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார், ட்ரீம் வாரிர்ஸ் பிக்சர் இந்த படத்தை தயாரித்துள்ளது. நீண்ட நாட்களாக மந்தமாக இருந்து வந்த இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது மும்மரமாக நடந்து வரும் நிலையில். இந்த படத்தை எப்படியாவது வரும் தீபாவளிகுள் வெளியிட வேண்டும் என்று படக்குழு திட்டம் தீட்டி வருகின்றன.

- Advertisement -

இந்த படத்தின் எந்த தகவளையும் வெளியிடாமல் மிக ரகசிமாக காத்து வந்தது படக்குழு, ஆனால், தற்போது இந்த படத்தின் கதை என்னவென்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் நடிகர் சூர்யா ஒரு அரசியல் பிரமுகராக நடித்து வருகிறாராம். மேலும், இந்த படத்தை ஒரு அரசியல் கலந்த சுவாரஸ்யமான கதையாக இயக்குனர் செல்வராகவன் எடுத்து வருகிறாராம்.இந்த படத்தில் சூர்யாவின் பெயர் நந்த கோபாலன் குமார் (Nandha Gopalan Kumaran) அதனால் தான் இந்த படத்திற்கு என்.ஜி.கே(NGK ) என்று பெயர் சூட்டியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

surya

இளைய தளபதி விஜய் நடித்துள்ள ‘சர்கார்’ படமும் ஒரு அரசியல் கலந்த படமாக இருக்கும் என்று தான் எதிர்பார்க்கபடுகிறது. மேலும், விஜயின் சர்கார் படமும் சூர்யாவின் என் ஜி கே படமும் தீபாவளி அன்று தான் வெளியாகவுள்ளது. இதனால் ஒரே கதைக்களத்தை கொண்ட இந்த இரு ஹீரோக்களின் படங்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement