அட கொடுமையே, இங்க போய்ட்டு வந்ததால தான் சூர்யாவுக்கு கொரோனா வந்துச்சா ? புகைப்படம் இதோ.

0
1849
surya
- Advertisement -

நடுமுழுதும் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக கொரோனாவின் கோர தாண்டவம் முடிவில்லாமல் தொடர்ந்து வருகிறது. இந்த நோயினால் இந்தியாவில் பல லட்சம் பேர் பலியான நிலையில் பல்வேறு பிரபலங்களையும் இந்த கொடிய வைரஸ் விட்டுவைக்கவில்லை.பாலிவுட்டின் டாப் ஸ்டாரான அமிதாப் பச்சன் மற்றும் அவருடைய குடும்பத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன், தெலுங்கு சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி மலையாள நடிகர் பிருத்விராஜ் தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி மற்றும் அவரது மகனுமான நடிகர் ராம்சரண் நடித்த ரகுள் பிரீட் சிங் நிக்கி கல்ராணி தமன்னா என்று பல்வேறு தளங்கள் கொரோனா தொட்டால் பாதிக்கப்பட்டு பின்னர் அதிலிருந்து மீண்டு வந்தார்கள்.

-விளம்பரம்-
https://twitter.com/SuriyaFansTeam/status/1353526749842182144

அதே போல தமிழ் சினிமாவை பொறுத்தவரை விஷால் மற்றும் அவரது தந்தை, சரத் குமார், கருணாஸ் என்று பல நடிகர்கள் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டு பின்னர் குணமடைந்தனர். இப்படி ஒரு நிலையில் தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான சூர்யாவிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட சூர்யா, ’கொரோனா’ பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன். வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்பதை அனைவரும் உணர்வோம். அச்சத்துடன் முடங்கிவிட முடியாது.

- Advertisement -

அதேநேரம் பாதுகாப்பும், கவனமும் அவசியம். அர்ப்பணிப்புடன் துணைநிற்கும் மருத்துவர்களுக்கு அன்பும், நன்றிகளும் என்று பதிவிட்டு இருந்தார். சூர்யாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது திரையுலகிலும், ரசிகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவர் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக வலைத்தளத்தில் பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள்.

ஏற்கனவே சூர்யாவின் தந்தையான நடிகர் சிவகுமாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக வதந்திகள் வெளியானது. ஆனால், அப்போது கூட சூர்யாவிற்கு கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. இருப்பினும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடிகர் சூர்யா சூர்யா நற்பணி இயக்க வட சென்னை தெற்கு மாவட்ட தலைவர் மற்றும் தொழில்நுட்ப பிரிவு தலைவர் தலைவர்
ஹரி ராஜ் – பிரியா திருமணத்திற்கு நேரில் சென்று வாழ்த்தி இருந்தார். அப்போது நடிகர் சூர்யாவிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

-விளம்பரம்-
Advertisement