நயன்தாரா கோபபட்டா பறக்கும். அவரு தான் அதிகம் திட்டு வாங்குவர். நயனுடன் ஜோடியாக நடித்த ஹீரோ பேட்டி.

0
40036
nayanthara
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார் நடிகை நயன்தாரா. சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகை நயன்தாரா. தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களுக்கு நிகராக சம்பளத்தை வாங்கும் ஒரே நடிகையும் இவர் தான். தற்போது நடிகை நயன்தாரா அவர்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் பிசியாக நடித்து வருகிறார். நயன் சமீப காலமாகவே கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

-விளம்பரம்-
Image result for nayanthara udhayanidhi"

- Advertisement -

கடந்த ஆண்டு நயன்தாரா நடிப்பில் வெளிவந்த விசுவாசம், பிகில் உள்ளிட்ட படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. இந்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் ரஜினி காந்த் நடிப்பில் வெளிவந்த படம் “தர்பார்”. இந்த வருடம் தொடக்கத்திலேயே ரஜினி காந்துக்கு ஜோடியாக நயன்தாரா அவர்கள் நடித்து இருக்கிறார். இந்த நிலையில் நடிகை நயன்தாரா அவர்கள் மூக்குத்தி அம்மன் என்ற படத்தில் கமிட்டாகியிருக்கிறார்.
இந்தப் படம் கோடை விடுமுறைக்கு திரைக்கு வரும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

மேலும், நடிகை நயன்தாரா அவர்கள் உதயநிதி ஸ்டாலின் உடன் நண்பேண்டா, இது கதிர்வேலன் காதல் என்று இரு படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்திற்கு பிறகு இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கவில்லை. அதற்கு காரணம் நடிகர் உதயநிதி ஸ்டாலின் மனைவி நயன் உடன் சேர்ந்து படத்தில் நடிக்க கூடாது என்று சொன்னதாக வதந்திகள் வந்தது. இது எந்த அளவிற்கு உண்ணமை என்று தெரியவில்லை. இந்நிலையில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சமீபத்தில் நடந்த பேட்டியில் நயன்தாரா குறித்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அதில் அவர் கூறியது, இப்ப எப்படி இருக்காங்கன்னு தெரியலை. முன்னாடி எல்லாம் நயன்தாராவுக்கு ரொம்ப கோவம் வரும். தொட்டதுக்கெல்லாம் கோபப்படுவார்கள். கோபம் வந்தால்போதும் செல்போன் தூக்கி போட்டுடுவாங்க. நிறைய போன் இந்த மாதிரி தான் உடைந்து இருக்கு.

-விளம்பரம்-

வீடியோவில் 2 : 37 நிமிடத்திற்கு பின் பார்க்கவும்

கொஞ்சம் கோபத்தை குறைத்தால் நல்ல இருக்கும். இப்ப நயன்தாரா எப்படி இருக்காங்கன்னு தெரியலை. நான் அவங்க கிட்ட பேசி ரொம்ப நாளாச்சு என்று கூறினார். தற்போது மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவான படம் தான் “சைக்கோ”. இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ் ஹைத்ரி, நித்யா மேனன், ராம் உள்ளிட்ட பல நடிகர்கள் மேனன், உள்ளார்கள். இசைஞானி இளைராஜா அவர்கள் படத்திற்கு இசை அமைத்து உள்ளார். சைக்கோ படம் திரை அரங்கில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் பார்வையில்லாத மாற்றுத் திறனாளி கதாபாத்திரத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து உள்ளார்.

Advertisement