-விளம்பரம்-
Home பொழுதுபோக்கு சமீபத்திய

உதயநிதியின் மகனை பாத்தீங்க, அவரோட மகளை பாத்திருகீங்களா. இதோ புகைப்படம்.

0
5455
udhay

ஒரே சமயத்தில் சினிமா மற்றும் அரசியல் இரண்டிலும் ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒருகலாக இருந்து வருகிறார. குருவி படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமான உதயநிதி ஸ்டாலின் ஆதவன் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். நான்கு படங்களை தயாரித்த பின்னர் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலம் ஹீரோவாக களம் இறங்கினார் உதயநிதி ஸ்டாலின். தனது முதல் படமே அமோக வெற்றி பெற்றதால் அடுத்தடுத்து படங்களில் ஹீரோவாக நடிக்கத் தொடங்கினார் உதயநிதி.

-விளம்பரம்-

ஆனால் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்திற்கு பின்னர் ஒரு ஹிட் படத்தைக் கொடுக்க மிகவும் தடுமாறினார் உதயநிதி ஸ்டாலின். இடையில் இவரது நடிப்பில் வெளியான மனிதன் திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதேபோல கண்ணேகலைமானே சைக்கோ போன்ற படங்கள் உதயநிதி ஸ்டாலினுக்கு நல்ல வெற்றியை கொடுத்திருந்தது. தற்போது கண்ணை நம்பாதே என்ற படத்தில் நடித்து வருகிறார்.

மேலும், கனா படத்தை இயக்கிய அருண் ராஜா காமராஜுடன் ஒரு புதிய படத்தில் கமிட் ஆகியுள்ளார் உதயநிதி சமீபத்தில் தான் இந்த படத்தின் அறிவிப்பு கூட வெளியானது. உதயநிதி ஸ்டாலின் கடந்த 2002ஆம் ஆண்டு கிருத்திகா என்பவரை திருமணம் செய்து கொண்டார் கிருத்திகா வேறு யாரும் கிடையாது தமிழில் கடந்த 2013ஆம் ஆண்டு வணக்கம் சென்னை படத்தை இயக்கி தயாரித்து வந்தவர் தான் கிருத்திகா.

-விளம்பரம்-

கிருத்திகா மற்றும் உதயநிதி ஸ்டாலின்னுக்கு இன்பநிதி என்ற மகனும் தமன்யா என்ற மகளும் உள்ளனர். இந்த நிலையில் இவருடைய மகன் இன்பநிதியின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதை பார்த்த பலரும் உதயநிதி மகன் இப்படி வளந்துவிட்டாரே என்று வியப்படைந்து உள்ளார்கள். ஆனால், இவரது மகளின் புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-
-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news