திடீர் என்று கமலுக்கு போன் செய்து பேசிய விஜய்..! ஏன் ..? எதற்கு..?என்ன பேசினார் தெரியுமா..?

0
390
kamal
- Advertisement -

உலக நாயகன் கமலஹாசன் எப்போதும் தனது ட்விட்டர் பக்கத்தில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கிறார். அதிலும் கமல் தனது ‘மக்கள் நீதி மையம் ‘ கட்சியை ஆரம்பித்ததிலிருந்து ட்விட்டரில் ரசிகர்களும், தொண்டர்களும் கேட்கும் கேள்விக்கு எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் பதிலளித்து விடுகிறார் நடிகர் கமல்.

இந்நிலையில் ரசிகர் ஒருவர் ட்விட்டர் பக்கத்தில் கமலிடம் விஜய் அரசியல் வருகை குறித்து ஒரு கேள்வி கேட்டிருந்தார். அதில் “உங்களின் தம்பி நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் நீங்கள் வரவேற்பீகளா” என்று கடந்த ஜூன் 28 ஆம் தேதி கேள்வி கேள்வி ஒன்றை கேட்டிருந்தார். எனக்கு மிகவும் பிடித்த தம்பி” என விஜய் பற்றி அவர் குறிப்பிட்டார். இதை பார்த்த தளபதி விஜய் கமல்ஹாசனுக்கு போன் செய்து சம்பவத்தை பற்றி பேசியுள்ளார்.

அதுமட்டும் இன்றி அவர் போட்ட ட்விட்டுக்கு நன்றி தெரிவித்துள்ளார் விஜய் . மேலும் விஜய் கமலுக்கு SMS மூலமாகவும் நன்றி தெரிவித்தார் என்று கூறப்படுகிறது.இதற்கு கடந்த 30ஆம் தேதி பதிலளித்த நடிகர் கமல் “எனது அனைத்து தம்பிகளையும் வரவேற்கிறேன், அதுவும் இவர் எனக்கு மிகவும் பிடித்த தம்பி, எனக்கு மட்டுமல்ல,அனைவருக்குமே பிடித்த தம்பி, கண்டிப்பாக வரவேற்கிறேன்.” என்று பதிவிட்டிருந்தார்.

- Advertisement -

vijay actor

இதனால் விஜய் ரசிகர்கள் மிகுந்த மகழ்ச்சியில் இருந்து வருகின்றனர். மேலும், இந்த பதிவின் கீழ் ஒரு சிலரோ “கமல் முதல்வர், விஜய் துணை முதல்வர்” என்ற அளவிற்கெல்லாம் பதிவுகளை போட ஆரம்பித்து விட்டனர். கடந்த ஜூன் 28 ஆம் தேதி நடிகர் கமலஹாசன் “வணக்கம் ட்விட்டர்” பக்கத்தில் ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு நேரலையில் பதிலளித்தார் என்பது குறிப்படத்தக்கது.

Advertisement