தளபதிவிஜய் ஒரு தீர்க்கதரிசி.! விஜய் படத்தில் சொன்னது கொட்டாச்சி வாழ்க்கையிலேயே நடந்துவிட்டது

0
449
Vijay

காமெடிய நடிகரான கொட்டாங்குச்சியை சினிமா ரசிகர்கள் சமீப காலமாக மறந்து போய் இருந்தனர். வடிவேலு, விவேக் போன்ற முன்னணி காமெடி நடிகர்களுடன் காமெடியில் கலக்கிய நடிகர் கொட்டாங்குச்சியை சில வருடங்களாக சினிமாவில் காண முடியாமல் இருந்தது.

ஆனால், சமீபத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியாகி வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கும் “இமைக்காநொடிகள்” படத்தில் நயன்தாராவின் மகளாக நடித்த மானஸ்வி என்ற சிறுமி நடிகர் கொட்டாங்குச்சியின் மகள் என்று தெரிந்ததும் ரசிகர்களின் மத்தியில் கொட்டாங்குச்சியின் பேச்சுக்கள் மீண்டும் கிளம்பியுள்ளது.

நடிகர் கொட்டாங்குச்சி விஜய் நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான “யூத்” திரைப்படத்தில் விவேக்குடன் காமெடியில் கலக்கி இருப்பார். அந்த படத்தின் காதலர் தினத்தன்று கூட தனக்கு யாரும் காதலை சொல்ல மாற்றாங்க என்ன பண்றது என்று நடிகர் கொட்டாங்குச்சி, விஜயிடம் கூறுவது போல ஒரு காட்சி அமைந்திருக்கும்.

kottachi-wife

kottachi

kottachi

அந்த காட்சியில் நடிகர் விஜய், தன்னம்பிக்கையை மட்டும் இழந்திராத, அது தான் உன்னோட உண்மையான பர்சனாலிட்டி கொட்டாங்குச்சிக்கு நம்பிக்கை அளிப்பார். இந்த திரைப்படம் வந்து 16 ஆண்டுகள் கடந்த நிலையில் அந்த படத்தில் விஜய் கூறியது போலவே நடிகர் கொட்டாங்குச்சி வாழ்க்கையில் நம்பிக்கையுடன் போராடி முன்னேறி இருக்கிறார்.அது மட்டும் இன்றி அவருக்கு மனைவியும் கிடைத்துவிட்டார்.அவருடைய மகளும் சினிமாவில் நடிக்க வந்துவிட்டார், ஆம் இமைக்க நொடிகள் படத்தில் நயன்தாரா மகளாக நடித்தது இவருடைய மகள் தான்.விஜய் ஒரு தீர்க்கதரிசி என்று அவரது ரசிகர்கள் “யூத்” படத்தின் இந்த காட்சியை குறிப்பிட்டு ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.