தளபதி விளைய படத்தில் சர்ச்சை நடிகை ஸ்ரீ ரெட்டியா..? விஜய் பற்றி என்ன சொன்னார் தெரியுமா.?

0
233
Sri-reddy

தமிழ் சினிமாவில் விஜய் மற்றும் அஜித் ஆகிய இருவரும் இரண்டு முக்கிய நட்சத்திரங்களாக திகழ்ந்து வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் கோடி கண்ணகில் ரசிகர்கள் இருந்தாலும், இவருடன் நடிக்க பல நடிகைகள் காத்துக் கொண்டிருக்கின்றனர். அது போக பிரபலங்களிடம் பேட்டி எடுக்கும் போது அவர்களிடம் கேட்கும் பொதுவான கேள்விகளில் விஜய் மற்றும் அஜித் பற்றிய கேள்வி கண்டிப்பாக இடம்பெற்றுவிடும்.

Actress sri reddy

இதை போல சமீபத்தில் தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி, இளையதளபதி விஜய்யுடன் நடிக்க வேண்டும் என்று ஆசை தெரிவித்துள்ளார்.சில மாதங்களாக தெலுகு சினிமாவில் தன்னுடன் நெருக்கமாக இருந்தவர்களின் பெயர்களை ஆதாரத்துடன் வெளியிட்டு வந்தார். தற்போது ‘தமிழ் லீக்ஸ்’ என்ற பெயரில் தமிழ் சினிமா பிரபலங்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறிவருகிறார்

தற்போது சென்னையில் உள்ள நடிகை ஸ்ரீரெட்டி பல்வேறு பேட்டிகளையும் அளித்து வருகிறார்.அதுபோக அடிக்கடி தனது முகநூல் பக்கத்தில் நேரலையில் வந்து ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு வெளிப்படையாக பதிலளித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் தனது முகநூல் பக்கத்தில் நேரலயில் வந்த நடிகை ஸ்ரீரெட்டியிடம் ரசிகர்கள் பல கேள்விகளை கேட்டனர்.

vijay actor

அப்போது உங்களுக்கு தமிழ் சினிமாவில் யார் மிகவும் பிடித்த நடிகர் என்ற கேள்விக்கு அஜித் என்று பதிலளித்தார் நடிகை ஸ்ரீரெட்டி. அதே போல விஜய் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்ற கேள்விக்கு ‘தளபதி விஜய், மிகவும் க்யூட்டான ஒரு நடிகர்’ என்று பதிலளித்தார்.

மேலும், விஜய்யுடன் உங்களுக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்ற கேள்விக்கு, ‘நாக்க முக்கா’ பாடலை பாடிய கொஞ்சம் ஆட்டம் போட்ட நடிகை ஸ்ரீரெட்டி, அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன், நான் கண்டிப்பாக செய்வேன். அவருடன் நடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். ஆனால், அது நடக்குமா என்று தெரியவில்லை,’ என்று பதிலளித்துள்ளார்.