தமிழ் புத்தாண்டில் தமிழனாக சாதனை படைத்த தளபதி விஜய் ! மெர்சலில் ரசிகர்கள் !

0
1350
mersal viajy
- Advertisement -

வெளியான இலயதளபதியின் மெர்சல் படம் வசூல் சாதனையை படைத்தது.படம் வெளியான பிறகு பல இன்னல்களை சந்தித்தாலும் அது படத்திற்கு மேலும் பலம் சேர்த்து படம் கூடுதலாக இன்னும் சில நாட்கள் திரையரங்குகளில் ஓட உறுதுணையாக இருந்தது.என்னதான் விஜயின் மாஸ் மற்றும் அட்லீயின் சோசியல் அட்வைஸ் இந்த படத்தில் இடம்பேட்டிருந்தும் இந்த படத்தின் முக்கிய ஹீரோவாக நமக்கு திரைக்கு பின்னால் தெரிந்தது இசை புயல் ஏ. ஆர். ரஹமான் தான்.படத்தின் பாடல்களிலும் பின்னணி இசையிலும் தெரிக்விட்டிருந்தார்.

-விளம்பரம்-

mersal

- Advertisement -

மெர்சல் படம் வெளியாகும் முன்னரே அந்த படத்தின் பாடல்கள் படத்திற்கு மேலும் ஒரு பலத்தை கூட்டி படத்தின் எதிர்பார்ப்பை இன்னும் சற்று அதிகரித்தது.அதில் குறிப்பாக சொல்ல போனால் அந்த படத்தில் இடம்பெற்ற ஆளப்போ ரான் தமிழின் என்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் பரவி ஹிட்டானது. நல்ல பாடல் வரிகலும் நல்ல பின்னணி இசையும் கொண்ட அந்த பாடல் தமிழர்களின் பெருமையை பறை சாற்றியது என்று கூட கூறலாம்.

மேலும் தமிழ் புத்தாண்டான இன்று விஜய் ரசிகர்களுக்கு மேலும் ஒரு மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளது .அது என்னவென்றால் மெர்சல் படத்தில் இடம் பெற்ற ஆளப்போறான் தமிழன் பாடல் தற்போது யூ ட்யூபில் 35 மில்லியன் பார்வையாளர்களையும் 2 லட்சத்து 71 ஆயிரம் லைக்ஸ்களையும் பெற்று சாதனை படைத்துள்ளது.இந்த மகிழ்ச்சியான செய்தியை விஜய் ரசிகர்கள் கொண்டாடும் விதமாக #AalaporaanThamizhanHits35MViews என்ற ஹஸ் டேக் கை சமூக வலைதளத்தில் குறிப்பிட்டு கொண்டாடி வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement