மன்றம் மூலம் வந்த தகவல், வறுமையில் வாடிய கர்ப்பிணிக்கு உதவிய நடிகர் விஜய்.

0
2344
- Advertisement -

தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் ‘தளபதி’ விஜய். ‘சர்கார்’ படத்துக்கு பிறகு ‘தளபதி’ விஜய் டபுள் ஆக்ஷனில் அசத்திய ‘பிகில்’ திரைப்படம் கடந்த 2019-ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளி வந்து மாஸ் ஹிட்டானது. இதனைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் தயாராகி கொண்டிருக்கும் திரைப்படம் ‘மாஸ்டர்’. இப்படத்தை இயக்கி கொண்டிருக்கும் இயக்குநர் ‘மாநகரம்’ லோகேஷ் கனகராஜ். அதுவும் மாஸ்டரில் விஜய் மட்டும் அல்ல, நம்ம ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியும் நடித்திருக்கிறார். அவருக்கு இதில் மாஸான வில்லன் வேடமாம். இந்த படத்துக்கான ஷூட்டிங் முற்றிலும் ஏற்கனவே நிறைவு பெற்றது. இதன் இறுதிக்கட்ட வேலைகள் மும்மரமாக நடந்து கொண்டிருக்கிறது. உலகமெங்கும் தற்போது ‘கொரோனா’ எனும் வைரஸ் தீயாய் பரவி வருகிறது. ஆகையால், ‘144’ போடப்பட்டுள்ளது. தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது.

-விளம்பரம்-

திரையுலகில் அனைத்து படங்களின் ஷூட்டிங்கும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், பல படங்களின் டீம் திட்டமிட்டு வைத்திருந்த தங்களது ஷூட்டிங் ப்ளானை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு உள்ளனர். ‘கொரோனா’ பிரச்சனை முடிந்து எப்போது அனைத்து படங்களின் பணிகளும் துவங்கப்போகிறது என்பது பெரிய கேள்விக் குறியாக இருக்கிறது.

- Advertisement -

கொரோனா நிவாரண பணிகளுக்காக பல முன்னணி திரையுலக பிரபலங்கள் நிதியுதவி கொடுத்து வந்தனர். நடிகர் ‘தளபதி’ விஜய்யும் கொரோனா நிவாரண பணிகளுக்காக ரூ.1.30 கோடி நிதியுதவி வழங்கியிருந்தார். அதுமட்டுமின்றி, நடிகர் விஜய் ‘கொரோனா’வால் பாதிக்கப்பட்ட தனது ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்களின் வங்கி கணக்கிற்கு ரூ.5000 பணம் அனுப்பி அவர்களுக்கு பேருதவி செய்திருந்தார்.

Master

இந்நிலையில், விஜய் மற்றுமொரு ஒரு உதவி செய்திருப்பதாக தகவல் வெளி வந்திருக்கிறது. தென்காசியை சேர்ந்த கணவன், மனைவி அமீன், கண்சுலாபீவி. இப்போது கண்சுலாபீவி 5 மாத கர்ப்பமாக இருக்கிறாராம். இவர்கள் சமீபத்தில் தான் தேனியில் குடியேறி உள்ளனர். ஆகையால், இவர்களுக்கு குடும்ப அட்டையும் இல்லாததால், ரேஷன் பொருட்கள் கூட வாங்க முடியாமல் கஷ்டப்பட்டு வந்திருக்கிறார்கள். பின், இவர்கள் குறித்து தெரிந்த கொண்ட தேனி விஜய் ரசிகர் மன்றத்தினர், நடிகர் விஜய்யிடம் சொல்லியிருக்கிறார்கள். அமீன் தனது மனைவியின் மருத்துவ செலவிற்கு மட்டும் பணம் கொடுத்தால் போதுமென சொல்லியிருக்கிறார். இதனைத் தொடர்ந்து அமீனுக்கு ரூ.5000 ஆயிரம் பணம் கொடுத்து பேருதவி செய்திருக்கிறார் நடிகர் விஜய்.

-விளம்பரம்-
Advertisement