விஜய் – சீமான் கூட்டணியில் தளபதி 62..! ஏ.ஆர். முருகதாசுக்கு நெருக்கடி ?

0
6045
vijay - seeman

விஜயின் 61ஆவது படமான மெர்சல் தீபாவளிக்கு வெளியாகி தற்போது வரை கிட்டத்தட்ட 170 கோடிகள் வரை வசூல் செய்து கல்லாவினை கட்டிக் கொண்டிருக்கிறது.
mersalஇந்த பரபரபான சூழ்நிலையில் விஜயின் 62ஆவது படம் விஜய்-முருகதாஸ் கூட்டணி எனவும் அந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரரிக்கவுள்ளதகவும் வாய் வழியாக சொல்லப்பட்டது.

தற்போது வந்துள்ள தகவலின் படி விஜயின் 62ஆவது படத்தை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் திரு.சீமான் அவரக்ள் இயக்கப் போவதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது. இதற்க்காக புதிதாக ஒரு கதைக்களம் எல்லாம் அமைக்கப்படவில்லை. இதற்க்கு முன்னர் அவர் இயக்கப்போவதாக இருந்த பேசப்பட்ட ‘பகலவன்’ படம் தான் மீண்டும் பேசப்படுகிறது.
pagalavan இந்த படம் முதலில் விஜய்-சீமான் கூட்டணி என்று அறிவிக்கப்பட்ட இந்த படம் பின்னர், விஜய் ஆண்டையை வைத்து எடுக்கப்படப் போவதாக அறிவிக்கப்பட்டது. தற்போது மீண்டும் விஜய்-சீமான் கூட்டணி என்று முடிவாகியுள்ளதாகத் தெரிகிரது.

உறுதியாகும் பட்சத்தில், கள அரசியலில் உணர்ச்சிப் பெருக்குடன் பொங்கும் சீமானின் வசனங்கள் யாவும் விஜய் பேசப் போகிறார் என்பது அரசியல் வட்டாரத்தை கதிகல்ங்க வைக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.