விஜய்யின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா..? வாய் பிளக்கும் ரசிகர்கள்..!

0
469
vijay-house

தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்குபவர்கள் பட்டியலில் நடிகர் விஜய்யும் ஒருவர். தனது சிறு வயது முதலே திரைப்படத்தில் நடிக்க துவங்கினாலும், முதன் முதலில் கதாநாயகனாக அறிமுகமானது 1992 ஆம் ஆண்டு வெளியான ‘நாளைய தீர்ப்பு ‘ என்ற படத்தில் தான்.

vijay actor

அன்று முதல் இன்று வரை விஜய் 60 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். மேலும், கோக், டோகோமோ, ஜோய் ஆலுக்காஸ் போன்ற எண்ணெற்ற விளமப்ர படங்களிலும் நடித்துள்ளார் விஜய். தனது கடின உழைப்பால் தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நட்சத்திரமாக விளங்கி வருகிறார் நடிகர் விஜய்.

தனது 34 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் நடிகர் விஜய்யின் சொத்துமதிப்பு எவ்வளவு தெரியுமா? நடிகர் விஜய்யின் சொத்து மதிப்பு 420 கோடி என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், அவர் ஒரு படத்திற்கு சம்பளமாக 26 கோடி வரை சம்பளம் பெறுகிறார்.

Vijay-rols-royce-car

விஜய்யின் சொத்து மதிப்பு விவரம்

* சாலிகிராமத்தில் உள்ள வீடு – 5 கோடி
* ரோல்ஸ் ராய்ஸ் சார் – 4.5 கோடி
* ஆடி கார் – 1 கோடி
* BMW கார் – 1.5 கோடி
* மினி கூப்பர் – 70 லட்சம்

அதே போக 4 திருமண மண்டபத்தையும் நடிகர் விஜய் நடத்தி வருகிறார். இதன் மூலமாகவே அவருக்கு ஆண்டிற்கு பல கோடி ரூபாய் வருமானம் வருகிறதாம். அதுமட்டுமல்லாமல் இன்னும் 3 ஆண்டுகளில் நடிகர் விஜயின் சொத்துமதிப்பு 50 சதவீதம் உயரும் என்று எதிரார்க்கப்படுகிறது.