படப்பிடிப்பிலேயே நடிகைக்கு பாலியல் தொந்தரவு சிவகார்த்திகேயன் பட வில்லன் கைது. 57 வயதில் செய்ற காரியமா இது ?

0
1351
vijay-raaz
- Advertisement -

சிவகார்த்திகேயனின் காக்கி சட்டை படத்தில் நடித்த வில்லன் நடிகர் பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான காக்கி சட்டை திரைப்படத்தில் வில்லனாக நடித்தவர் பிரபல பாலிவுட் நடிகர் விஜய் ராஸ் இவர் இந்த திரைப்படத்திற்கு முன்பாகவே கமல் நடிப்பில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான மும்பை எக்ஸ்பிரஸ் படத்தில் சிறு கதாபாத்திரத்தில் தோன்றி இருந்தார். ஆனால் இவர் பல வருடங்களாக பாலிவுட்டில் எண்ணற்ற படங்களில் நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

இவர் ‘மான்சூன் வெட்டிங்’, ‘ரன்’, ‘டெல்லி 6’ உள்ளிட்ட ஏராளமான பாலிவுட் படங்களில் நடித்து இருக்கிறார். காக்கிசட்டை படத்திற்கு பின்னர் இவர் தமிழில் எந்த படத்திலும் நடிக்கவில்லை இருப்பினும் தொடர்ந்து பாலிவுட்டில் பல படங்களில் நடித்து வந்தார் அந்த வகையில் சமீபத்தில் இவர் ஆயுஷ்மான் குரானா – அமிதாப் கூட்டணியில் வெளியான ‘குலாபோ சிதாபோ’படத்தில் நடித்திருந்தார். தற்போது வித்யா பாலன் நடிப்பில் உருவாகி வரும் ‘ஷெர்னி’ என்ற படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

- Advertisement -

இந்த படத்தின் படப்பிடிப்பு மகாராஷ்டிர மாநிலம் கோண்டியாவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படப்பிடிப்புத் தளத்தில் படக்குழுவைச் சேர்ந்த பெண்ணுக்குப் பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்பட்டது. இதனையடுத்து படப்பிடிப்பு உடனடியாக நிறுத்தப்பட்டது. படப்பிடிப்பு தளத்தில் சக நடிகைக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்ததால் கடந்த 2 ஆம் தேதி  விஜய் ராஸ் கைது செய்யப்பட்டார். 

பாலிவுட்டின் பிரபலமான நடிகர் என்பதால் விஜய் ராஸ் குறித்த செய்தியைப் பெரும்பாலான ஊடகங்கள் வெளியிட்டன.இந்நிலையில் நேற்று (03.11.2020) விஜய் ராஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். ஜாமின் வழங்கினாலும் தேவைப்படும்போது விசாரணை அதிகாரியின் முன்பு அவர் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக கோண்டியா மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளரான அதுல் குல்கர்னி கூறி இருக்கிறார்.

-விளம்பரம்-
Advertisement