பிரண்ட்ஷிப் டேவில் தனது நண்பர்களுடன் வீடியோ காலில் பேசியுள்ள விஜய் – யார் யார்னு பாருங்க.

0
5851
Vijay
- Advertisement -

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்கி வரும் நடிகர் விஜய், அவரது அப்பா சந்திரசேகர் மூலமாக திரையுலகிற்கு வந்தாலும் தனது தனிப்பட்ட திறமையால் இன்று ஒரு உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருகிறார். விஜக்கு போட்டியான நடிகர் என்றால் அது அல்டிமேட் ஸ்டார் அஜித் தான். என்ன தான் ஒரு சில ரசிகர்கள் தற்போதும் தல தளபதி சண்டையை போட்டுக்கொண்டு வந்தாலும் விஜய் மற்றும் அஜித் இடையே எப்போதும் ஆரோக்யமான உறவு இருக்கிறது என்று பல முறை நிறுப்பித்துள்ளனர்.

-விளம்பரம்-

விஜய்யின் நெருங்கிய நண்பர் என்பதால்,சஞ்சீவ் எந்த பேட்டியில் பங்குபெற்றாலும் அவரிடம் விஜய் குறித்த கேள்வி கண்டிப்பாக முன்வைக்கப்படும். அதே போல சஞ்சீவ் மற்றும் விஜய் இருவருமே பெரும்பலம் நேரில் சந்தித்துக்கொண்டாள் கூட படங்களை பற்றி அவ்வளவாக பேசுவதும் இல்லை. அவ்வளவு ஏன், நண்பனாக இருந்தாலும் இதுவரை விஜய்யிடம் பட வாய்ப்பு கூட கேட்டதில்லை நடிகர் சஞ்சீவ்.

- Advertisement -

அந்த அளவிற்கு சினிமாவையும் தனிப்பட்ட நட்ப்பையும் மெயின்டெய்ன் செய்து வருகிறார் சஞ்சீவ். விஜய்யின் திரை துறை நண்பர்களிலேயே சஞ்சீவ்விற்கு தான் விஜய்யை பற்றி அதிகம் தெரியும், காரணம் விஜய் படித்த அதே கல்லூரியில் தான் சஞ்சீவ்வும் படித்தார்.இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் சென்ற நண்பர்கள் தினத்தில் விஜய் தனது நண்பர்களுடன் வீடியோ காலில் பேசியுள்ளார்.

master

அந்த வீடியோ காளில் நடிகர் சஞ்சீவ் மற்றும் இன்னும் சில நண்பர்கள் இருக்கின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு தான் நடிகர் விஜய், மாஸ்டர் படக்குழுவினருடன் வீடியோ காலில் பேசிய ஒரு புகைப்படம் ஒன்றை நடிகை மாளவிகா மோகனன் பதிவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement