மெர்சல்’ படம் மீதான சர்ச்சை நாடு முழுவதும் விவாதத்தை கிளப்பியது . எச்.ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில் திரு . ஜோசப் விஜய் என விஜயின் மதத்தை சாடும் வகையில் கருத்தை வெளியிட்டிருந்தார் . இதுவிஜயின் ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் மீண்டும் எச்.ராஜா விஜய்யின் உண்மையான பெயர் ஜோசப் விஜய் என அவரது வாக்காளர் அடையாள அட்டையை ட்விட்டரில் வெளியிட்டு உண்மை கசக்கிறதா எனவும் கேட்டிருந்தார்.
இதுபோல அடுத்தவரின் ஐடியை எடுத்து பொதுவில் அதுவும் கோடானு கோடி மக்கள் பார்க்கும் டிவிட்டரில் போய்ப் போடலாம் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. சட்டம் படித்தவராச்சே ராஜா.. இது கூடவா அவருக்குத் தெரியாது .. அல்லது யாரும் இவருக்கு இது தப்பாச்சே என்று எடுத்துச் சொல்லவில்லையா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
விஜய்யின் பெயரை விடுங்க ராஜா சார், எப்படி அவருடைய ஐடி கார்டு உங்க கைக்கு வந்துச்சு.. அதைச் சொல்லுங் என்று இப்போது தமிழ்நாடே எச். ராஜாவைப் பார்த்துக் கேட்கிறது.