வாக்காளர் அட்டைக்கே இந்த கதினா..! அப்போ ஆதார் அட்டையோட கதி என்ன..?

0
2261
vijay
- Advertisement -

மெர்சல்’ படம் மீதான சர்ச்சை நாடு முழுவதும் விவாதத்தை கிளப்பியது . எச்.ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில் திரு . ஜோசப் விஜய் என விஜயின் மதத்தை சாடும் வகையில் கருத்தை வெளியிட்டிருந்தார் . இதுவிஜயின் ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் மீண்டும் எச்.ராஜா விஜய்யின் உண்மையான பெயர் ஜோசப் விஜய் என அவரது வாக்காளர் அடையாள அட்டையை ட்விட்டரில் வெளியிட்டு உண்மை கசக்கிறதா எனவும் கேட்டிருந்தார்.
vijay அவரின் செயலுக்கு எதிராக பல கருத்துகள் வந்தநிலையில் இப்போது அதை விட மிக முக்கியமான கேள்வி எழுந்துள்ளது. இவருக்கு எப்படி விஜய்யின் அடையாள அட்டை கிடைத்தது. யார் அவருக்குக் கொடுத்தார்கள் அப்படியே கொடுத்தாலும் ஒரு தனி நபரரின் அடையாளத்தை இவர் எப்படி போடலாம் என்ற கேள்விகள் எழுந்துள்ளன .

-விளம்பரம்-

இதுபோல அடுத்தவரின் ஐடியை எடுத்து பொதுவில் அதுவும் கோடானு கோடி மக்கள் பார்க்கும் டிவிட்டரில் போய்ப் போடலாம் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. சட்டம் படித்தவராச்சே ராஜா.. இது கூடவா அவருக்குத் தெரியாது .. அல்லது யாரும் இவருக்கு இது தப்பாச்சே என்று எடுத்துச் சொல்லவில்லையா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
H.Rajaசரி வாக்காளர் அடையாள அட்டைக்கே இந்த கதின்னா.. நம்ம நாட்டு மக்களின் ஆதார் எண்ணை வைத்து இவர்களெல்லாம் விளையாட மாட்டார்களா என்ற அச்சமும், பீதியும், பயமும், நடுக்கமும் மக்களுக்கு எழுந்துள்ளது. சாதாரண வோட்டர் ஐடியையே திருடுகிறவர்கள் (அடுத்தவருடையதை அவருக்குத் தெரியாமல், பெர்மிஷன் இல்லாமல் திருட்டுதானே பாஸ்!) ஆதார் நம்பரை வைத்து என்னவெல்லாம் செய்ய மாட்டார்கள் என்ற அச்சம் எழுவது இயல்புதானே.

- Advertisement -

விஜய்யின் பெயரை விடுங்க ராஜா சார், எப்படி அவருடைய ஐடி கார்டு உங்க கைக்கு வந்துச்சு.. அதைச் சொல்லுங் என்று இப்போது தமிழ்நாடே எச். ராஜாவைப் பார்த்துக் கேட்கிறது.
Aadhar card அனைவரும் அறிந்த ஒரு பிரபலமான செலிபிரிட்டிக்கே இந்த நிலை என்றால் சாதாரண குடிமக்கள் நிலை கேள்வி குறிதான் ???

Advertisement