தன்னுடைய கொள்ளுப்பேத்திக்கு தாலாட்டு பாடிய விஜயகுமார். எந்த மகளின் பேத்தி தெரியுமா? வைரலாகும் வீடியோ

0
920
- Advertisement -

தன்னுடைய கொள்ளுப்பேத்திக்கு விஜயகுமார் தாலாட்டு பாடியிருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்பவர் விஜயகுமார். இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, இந்தி என பிற மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். 1961 இல் வெளிவந்த ஸ்ரீ வள்ளி என்ற திரைப்படத்தில் முருகனாக குழந்தை நட்சத்திரமாக நடித்து தன்னுடைய பயணத்தைத் தொடங்கினார் விஜயகுமார்.

-விளம்பரம்-

அதனைத் தொடர்ந்து தற்போது வரை இவர் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் இதுவரை 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து இருக்கிறார். ஆரம்பத்தில் கதாநாயகனாகவும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருந்த விஜயகுமார் தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். மேலும், இவர் வெள்ளித்திரையில் மட்டுமில்லாமல் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்திருக்கிறார். அதேபோல் இவருடைய மகன் அருண்குமார் தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

- Advertisement -

விஜயகுமார் நடித்த படம்:

இவர் ஹீரோவாக மட்டுமில்லாமல் வில்லனாகவும் மிரட்டிக் கொண்டு வருகிறார். அதுமட்டும் இல்லாமல் விஜயகுமாரின் மகள்களும் படங்களில் நடித்திருந்தார்கள். சமீபத்தில் விஜயகுமார், விஜயகுமாரின் மகன் அருண் விஜய், அருண் விஜய்யின் மகன் ஆகிய மூன்று பேருமே சேர்ந்து நடித்திருந்த படம் ஓ மை டாக் . இந்த படம் ஒடிடி தளத்தில் வெளியாகி இருந்தது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து நடிகர் அருண் விஜய் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

விஜயகுமார் குடும்பம்:

இந்நிலையில் தன்னுடைய கொள்ளுப்பேத்திக்கு விஜயகுமார் தாலாட்டு பாடியிருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. பழம் பெரும் சினிமா தம்பதிகளான விஜய குமார்- மஞ்சுளா விற்கு 4 பெண் மற்றும் 1 ஆண் பிள்ளைகள் இருப்பது நமக்கு தெரியும். ஆனால், விஜயகுமார் கடந்த 1969 ஆம் ஆண்டு முத்துக்கன்னு என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர் தான் முதல் மனைவி. அதன் பின்னர் தான் விஜயகுமார் 1976ல் நடிகை மஞ்சுளாவை திருமணம் செய்து கொண்டார். விஜயகுமாரின் முதல் மனைவிக்கு பிறந்தவர்கள் தான் அருண் விஜய், அனிதா , கவிதா.

-விளம்பரம்-

கவிதா விஜயகுமார் குறித்த தகவல்:

மேலும், மஞ்சுளாவிற்கு பிறந்தவர்கள் வனிதா, ப்ரீத்தா மற்றும் ஸ்ரீதேவி. ஆனால், அருண் விஜய் அனைவரையும் உடன் பிறந்த சகோதரிகளாக தான் பாவித்து வருகிறார். விஜயகுமாரின் மூத்த மகள் கவிதா. இவர் சரத்குமார் நடிப்பில் வெளியான கூலி திரைப்படத்தில் நடித்திருந்தார். ஆனால், இவரின் மற்றொரு சகோதரியான அனிதா குறித்து பலரும் அறிந்திருக்க மாட்டார்கள். கவிதா திருமணம் செய்து கொண்டு லண்டனில் செட்டிலாகிவிட்டார். கவிதாவின் முதல் பொண்ணு தான் ஹாசினி. இவர் ஹேமந்த் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

கொள்ளுபேத்திக்கு தாலாட்டு:

இவர்கள் தற்போது சென்னையில் தான் இருக்கிறார்கள். இவர்களுக்கு தான் இரண்டு பெண்கள் இருக்கிறார்கள். முதல் மகளின் பெயர் கயல். இன்னொரு பெண் சித்தாரா. ஆகவே கவிதாவிற்கு 2 பேத்திகள் இருக்கிறார்கள். ஹாசினிக்கு திருமணம் ஆகி 12 வருடங்கள் ஆகிவிட்டது. இவருடைய முதல் பெண்ணுக்கு 8 வயது ஆகிறது. இரண்டாவது மகள் சித்தாரா. தற்போது ஆறு மாதம் ஆகிறது. சித்தாரவை தான் விஜயகுமார் கையில் வைத்துக்கொண்டு தாலாட்டு பாடி இருக்கிறார். தற்போது இந்த வீடியோ சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது.

Advertisement