-விளம்பரம்-
Home பொழுதுபோக்கு சமீபத்திய

களவாணி ஸ்டைலில் காதல் திருமணம, டாக்டர் மனைவி. நடிகர் விமலின் இரண்டு மகன்கள் மற்றும் சமீபத்தில் பிறந்த மகள்.

0
6713
vimal

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்களில் விமலும் ஒருவர். இவர் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளிவந்த பசங்க திரைப்படத்தின் மூலம் தான் கதாநாயகனாக மக்கள் மக்கள் மத்தியில் அறியப்பட்டார். பொதுவாகவே இவருடைய படங்கள் அனைத்தும் குறைவான பட்ஜெட்டில் தான் இருக்கும். பசங்க படத்தை தொடர்ந்து இவர் களவாணி படத்தில் நடித்திருந்தார். இந்த களவாணி படத்தின் மூலம் இவருடைய சினிமா பயணம் வேற லெவலுக்கு சென்றது.

-விளம்பரம்-

இதனைத் தொடர்ந்து நடிகர் விமல் தூங்கா நகரம், வாகை சூடவா, கலகலப்பு, சில்லுன்னு ஒரு சந்திப்பு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்குராஜா, மஞ்சப்பை, கதை திரைக்கதை வசனம் இயக்கம், ஒரு ஊர்ல ரெண்டு ராஜா, மாப்பிள்ளை சிங்கம் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார். சமீபத்தில் இவருடைய நடிப்பில் களவாணி 2 படம் வெளியாகி இருந்தது.நடிகர் விமல் கடந்த 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

இதையும் பாருங்க : அந்த கணக்கு எனக்கு மட்டும் தான் தெரியும் – தனுஷுடன் ஏற்பட்ட மோதல் குறித்து ஜகமே தந்திரம் தயாரிப்பாளர்.

இவரது திருமணம் களவாணி படத்தில் காண்பிக்கப்பட்டது போல தான் நடந்தது. நடிகர் விமல்,அக்ஷயா என்பவரை காதலித்தார். ஆனால், அவர்களின் வீட்டில் சம்மதிக்காததால் வீட்டை விட்டு ஓடி வந்து திருமணம் செய்து கொண்டார். அது மட்டுமல்ல அவரது மனைவி அக்ஷயா ஒரு மருத்துவர். மேலும், இவர் கடந்த ஆண்டு 8 மாதம் கர்ப்பிணியாக இருந்த போதே கொரோனா நோயாளிகளுக்காக சேவை செய்தார்.

-விளம்பரம்-

நிறை மாதத்தை நெருங்கிக் கொண்டிருந்ததால் மருத்துவமனை அவர்களுக்கு விடுமுறை கொடுத்திருக்கிறார்கள். ஆனால், அவர் தொடர்ந்து சேவை செய்து இருக்கிறார். சமீபத்தில் தான் இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. இந்த தம்பதியருக்கு ஏற்கனவே இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இப்படி ஒரு நிலையில் இவரது இரண்டு மகன்கள் மற்றும் மகளின் புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.

-விளம்பரம்-
-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news