தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு குறித்து நடிகர் விமல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்த விமல் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருந்து வந்தார்.தமிழில் இவர் நடித்த களவாணி, கேடி பில்லா கில்லாடி ரங்கா போன்ற திரைப்படங்கள் நல்ல வரவேற்ப்பை பெற்றது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இவர் நடித்த படங்கள் சரியாக ஓடவில்லை. கடந்த சில ஆண்டுக்கு முன்னர் கன்னட நடிகர் அபிஷேக்கை தாக்கியதாக நடிகர் விமல் மற்றும் அவரது நண்பர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இருந்தனர். அதேபோல கொரோனா காலத்தில் கொடைக்கானலில் உள்ள வனப்பகுதியில் அனுமதியில்லாமல் விமல் மற்றும் சூரி ஏரியில் மீன் பிடித்ததாக கூறி புகார் எழுந்தது.

இதையடுத்து சூரிய மற்றும் விமல் ஆகிய இருவருக்கும் தலா 2 ஆயிரம் ரூபாய் அபராதம் கூட விதிக்கப்பட்டு இருந்தது. இப்படி விமலுக்கு சமீப காலமாக போறாத காலமாக இருக்க நடிகர் விமலின் மனைவி அக்‌ஷயாவும் வருகிற சட்டசபை தேர்தலில் மணப்பாறை தொகுதியில் திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிட நடிகரும், திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து விருப்ப மனுவை அளித்தார்.

Advertisement

இப்படி ஒரு நிலையில் நடிகர் விமல் மீது, பண மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது. நடிகர் விமல் குறித்து திமுக தலைவர் ஸ்டாலினிடம் தொண்டர் ஒருவர் புகார் அளித்துள்ளார். நடிகர் விமல் பண மோசடி செய்துள்ளதாக தஞ்சை பட்டுக்கோட்டை திருநாவுக்கரசு என்பவர் ஸ்டாலினிடம் புகார் அளித்துள்ளார். இப்படி ஒரு நிலையில் தன் மீது சுத்தப்பட்ட புகார் குறித்து நடிகர் விமல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், என்னை பற்றிய தவறான செய்திகளை சமூகஊடகத்திலும் நாளிதழ்களிலும் வந்திருப்பவற்றை படித்தேன். அது எனக்கு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியது. என் வளர்ச்சியை பொறுக்காத சிலர் இது போன்ற தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர்.

யாரோ ஒருவரின் தூண்டுதலின் பேரில் திநாவுக்கரசு என்பவர் என்மீது இது போன்ற அவதூறுகளை பரப்பி வருகிறார். திருநாவுக்கரசுக்கும் எனக்கும் எந்தவித நேரடித் தொடர்போ பணம் பரிமாற்றமோ இல்லை என்பதை உறுதிபட தெரிவித்துக்கொள்வதோடு மேலும் அவர் மீது இது தொடர்பாக மானநஷ்ட வழக்கு தொடர இருக்கிறேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களின் நோக்கம் என்னை ஏமாற்றி என்னிடமிருந்து பணம் பறிப்பதே ஆகும். மேலும் என்னைப் பற்றிய தகவல்களை என்னிடம் நேரடியாகவோ அல்லது என் செய்தி தொடர்பாளர் (PRO) பிரியாவிடமோ கேட்டுத் தெரிந்துக் கொள்ளலாம் என்று திட்டவட்டமாக நடிகர் விமல் கூறி இருக்கிறார்.

Advertisement
Advertisement