செம மாஸாக விமானம் ஓட்டும் டாக்டர் பட பிரபலம் – ஆச்சரியத்தில் உறைந்த ரசிகர்கள் , வைரலாகும் புகைப்படம்

0
378
vinay
- Advertisement -

நடிகர் வினய் செம்ம மாஸாக விமானம் ஓட்டி இருக்கும் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்பவர் வினய். இவர் ஆரம்பத்தில் விளம்பர படங்களில் தான் நடித்து இருந்தார். அதன் பிரபலத்தின் மூலம் தான் இவருக்கு சினிமா வாய்ப்பு கிடைத்து இருந்தது. பின் இவர் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த உன்னாலே உன்னாலே என்ற படத்தின் மூலம் தான் ஹீரோவாக தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமாகி இருந்தார். அதனை தொடர்ந்து இவர் ஜெயம் கொண்டான், மோதி விளையாடு, மிரட்டல், ஒன்பதில் குரு போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

பின்னர் இவருக்கு பெரிதாக சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை. மேலும், 2017 ஆம் ஆண்டு மிஸ்கின் இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த துப்பறிவாளன் படத்தின் மூலம் வில்லனாக வினய் மிரட்டியிருந்தார். அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் வில்லனாக கலக்கி கொண்டு இருக்கிறார். கடந்த ஆண்டு நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த டாக்டர் படத்திலும் வினய் நடித்து இருந்தார். இதில் அவர் அழகான, அமைதியான ஆர்ப்பாட்டம் இல்லாத வில்லனாக நடித்து இருந்தார்.

- Advertisement -

டாக்டர் படம்:

நீண்ட நாட்களுக்கு பிறகு சிவகார்த்திகேயனின் வெற்றிப்படமாக டாக்டர் படம் அமைந்திருக்கிறது. இயக்குனர் நெல்சன் இந்த படத்தை இயக்கி இருந்தார். இந்த படத்தில் பிரியங்கா, அர்ச்சனா, யோகிபாபு உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படத்தில் ஆக்ஷனுக்கு இணையாக காமெடி காட்சிகள் இடம் பெற்றிருந்தது. இந்த படத்தை கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் உடன் இணைந்து சிவகார்த்திகேயன் சொந்த நிறுவனமான எஸ்.கே.புரொடக்‌ஷனும் தயாரித்து இருந்தார்கள்.

Gallery

எதற்கும் துணிந்தவன் படம்:

இந்த டாக்டர் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. அதனை தொடர்ந்து சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகி இருந்த எதற்கும் துணிந்தவன் படத்திலும் வில்லனாக வினய் நடித்து இருந்தார். இந்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் பிரியங்கா அருள் மோகன், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், வினய், தேவதர்ஷினி, இளவரசு, சுப்பு பொன்வண்ணன், திவ்யா துரைசாமி, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர். மேலும், இந்த படத்திலும் வினய் நடிப்பு பெரிதும் பேசப்பட்டு இருந்தது.

-விளம்பரம்-
Vinay About Vimala Raman | வினய் விமலா ராமன்

வினய் திருமணம்:

இதனை தொடர்ந்து இவர் பல படங்களில் கமிட்டாகி நடித்து கொண்டு இருக்கிறார். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் வினய், நடிகை விமலா ராமனை சில ஆண்டுகளாகவே காதலித்து வருகிறார் என்றும் இருவரும் சேர்ந்து பல்வேறு இடங்களில் விடுமுறைகளை என்ஜாய் செய்து இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. அதோடு இவர்கள் கூடிய விரைவில் திருமணம் செய்ய இருக்கிறார்கள் என்று கூறப்பட்டது. ஆனால், இன்னும் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

வினய் விமானம் ஓட்டும் புகைப்படம்:

இந்த நிலையில் வினய் விமானம் ஓட்டும் புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
நடிகர் வினய் முதன்முதலில் விஸ்கி கம்பெனியில் தான் பணிபுரிந்திருக்கிறார் . பின் பேங்க் வேலை செய்தார். அப்போது தான் இவருக்கு சினிமா மீது ஆர்வம் வந்தது. அதுமட்டுமில்லாமல் நடிகர் வினய் குட்டி விமானம் ஓட்டி இருக்கிறார். அந்த விமானத்தை ஓட்டும் போது எடுத்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகமாக வைரலாகி வருகின்றது.

Advertisement