காதல் என்னதான் ஆச்சி – ஒரு வழியாக தனது திருமணம் குறித்து பேசிய விஷால்.

0
1234
vishal
- Advertisement -

தமிழில் சினிமாவில் புரட்சி தளபதி என்று பட்டப்பெயரை எடுத்தவர் நடிகர் விஷால். பிரபல தயாரிப்பாளர் ஜி.கே ரெட்டியின் இரண்டாவது மகனான இவர் தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளராகவும், திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும் இருந்து வந்தார்.விஷால் – அனிஷா திருமண நிச்சயதார்த்தம் கடந்த 2019 ஆம் ஆண்டு மே மாதம் 16-ந்தேதி சனிக்கிழமை, ஐதராபாத்தில் உள்ள ஐடிசி கோஹினுரில் நடைபெற்றது. மேலும், இவர்களது திருமணம் அதே ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

-விளம்பரம்-
Vishal and Anisha Alla Reddy Call Off Wedding Six Months After Their  Intimate Engagement

ஆனால், தற்போது வரை இவர்கள் திருமணம் நடைவில்லை பெறவில்லை. இப்படி ஒரு நிலையில் விஷாலின் வருங்கால மனைவி அனிஷா, விஷலுடன் இருந்த புகைப்படத்தையும், நிச்சயதார்த்தத்தின் போது எடுத்த அணைத்து புகைப்படத்தையும் தனது சமூக வலைதள பக்கத்தில் இருந்துநீக்கியும் இருந்தார். எனவே, விஷாலின் திருமணம் நின்று விட்டதாக கூறப்பட்டது. ஆனால், கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29 ஆம் தேதி விஷாலின் பிறந்தநாளையொட்டி விஷாலுக்கு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார் அனிஷா.

இதையும் பாருங்க : சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி படம் என்னாச்சி – இதோ வெளியான அசத்தல் புகைப்படங்கள்.

- Advertisement -

ஆனால், இந்த ஆண்டு விஷால் பிறந்தநாளுக்கு அனிஷா எந்த ஒரு வாழ்த்தையும் தெரிவிக்கவில்லை. அதே போல விஷால் – அனிஷா திருமணம் நின்றுவிட்டதாக கோலிவுட் வட்டாரத்தில் தகவல்கள் வெளியானது. இப்படி ஒரு நிலையில் தனது திருமணம் குறித்து மனம் திறந்துள்ள விஷால், நான் ஒரு இயக்குனராக வரவேண்டும் என்று தான் நினைத்தேன். அதனால் தான் உதவி இயக்குனராக சேர்ந்தேன். நான் என் பயணத்தை துவங்கி 16 வருடங்கள் ஆகிவிட்டது. தற்போது வரை நன்றாக சென்றுகொண்டு இருக்கிறது.

Tamil actor Vishal's marriage date fixed - The Week

எனக்கு எந்த திட்டமும் இல்லை, வாழ்க்கையின் போக்கில் விட்டுவிட்டேன். நான் இப்போது சிங்கிள் தான் மிங்கிளாக ரெடி தான். திருமணம் எப்போ நடக்குமோ அப்போ நடக்கும். வாழ்க்கை போக்கும் போக்கில் போகிறது. நான் ஒரு நடிகராகவும் தயாரிப்பாளராகவும் மாறுவேன் என்று எதிர்பார்க்கவில்லை என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement