திருமணம்..! காதலி யார் என்ற கேள்விக்கு விஷால் சொன்ன பதில் என்ன தெரியுமா ..!

0
986
Actor-vishal

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் புரட்சி தளபதி விஷால். நடிகர் என்பதை விட தமிழ் சினிமா துறை நடிகர் சங்கத்தின் தலைவராகவும் இருந்து வருகிறார். நடிகர் விஷால் பிரபல நடிகர் சரத் குமாரின் மகள் வரலக்ஷ்மி சரத்குமாரை காதிலிது வருவதாக கூறப்பட்டு வருகிறது.

பெரும்பாலும் விஷால் செல்லும் அணைத்து பொது நிகழ்ச்சிகளிலும் நடிகை வரலட்சுமியை காண முடிகிறது. மேலும் இவர்கள் இருவரின் காதலை பற்றி அடிக்கடி பிரலங்கள் சிலர் பொது இடத்திலேயே கிண்டலாக கூறியுள்ளனர். ஆனால் இவர்கள் இருவரும் தங்களது காதலை பற்றி வெளிப்படையாக கூறவில்லை.

இந்நிலையில் சமீபத்தில் நடிகர் விஷால் , நடிகர் கார்த்தியின் மகன் நடித்துள்ள “மிஸ்டர்.சந்திரமௌலி”படத்தின் இசை வெளியிட்டு விழாவில் கலந்து கொண்டார். இந்த படத்தில் நடிகை வரலக்ஷ்மி சரத் குமார் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பொ மேலும் ரெஜினா இந்த படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார்.

Vishal

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் விஷால் “தான் இந்த நிகழ்ச்சிக்கு வரலக்ஷ்மிக்காக தான் வந்தேன் என்று கூறியுள்ளார் “. மேலும் தனது திருமணத்தை பற்றி கூறிய விஷால் “நான் நான் கண்டிப்பாக ஒரு தமிழ் பெண்ணை தான் திருமணம் செய்துகொள்வேன் என்றும், அவர் யார் என்பதை அடித்த வருடம் (2019) தான் தெரிவிப்பேன்” என்று கூறியுள்ளார்.