82 வயதிலும் தீராத ஃபிட்னெஸ் காதல் – இந்த வயதிலும் விஷால் தந்தைக்கு கிடைத்துள்ள பெருமை. என்ன தெரியுமா ?

0
2761
vishal
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் உள்ள முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் விஷால். இவர் சினிமாவில் நடிகர் ஆவதற்கு முன்பே நடிகர் அர்ஜுனிடம் உதவி இயக்குனராக பணி புரிந்துள்ளார். மேலும், சினிமா தயாரிப்பாளர் ஜிகே ரெட்டி அவர்களின் மகன் தான் விஷால். இவர் நடித்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. மேலும், இவர் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆவார். நடிகர் விஷால் அவர்கள் 2004 ஆம் ஆண்டு வெளிவந்த செல்லமே என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

-விளம்பரம்-
 இதையடுத்து அடுத்த ஓராண்டிற்கு உடற்பயிற்சியின் அவசியத்தை வலியுறுத்தும் வண்ணம் FIT India சார்பில் விழிப்புணர்வு பணிகளை ஜிகே ரெட்டி மேற்கொள்வார்.

இந்நிலையில் விஷால் அவர்கள் தன்னுடைய தந்தைக்கு கிடைத்த கௌரவத்தை குறித்து தற்போது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். விஷாலும் அவருடைய தந்தை இருவருமே உடற்பயிற்சி மீது ஆர்வம் உடையவர்கள். அவ்வப்போது ஜிகே ரெட்டி அவர்கள் தனது ஒர்க் அவுட் வீடியோக்களை பகிர்ந்து கொள்வார். தற்போது ஜிகே ரெட்டி அவர்களுக்கு 82 வயது ஆகிறது. இந்த 82 வயதிலும் உடற்பயிற்சியில் அதிக கவனம் செலுத்தி உடலை கட்டுகோப்பாக வைத்து இருக்கிறார்.

இதையும் பாருங்க : முதல் முறையாக தன் வருங்கால கணவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஷபானா (அட, இந்த நடிகரா)

- Advertisement -

இந்த நிலையில் ஜிகே ரெட்டி அவர்களுக்கு FIT India அமைப்பின் தூதராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். FIT India அமைப்பின் சார்பில் அடுத்த ஓராண்டிற்கு உடற்பயிற்சியின் அவசியத்தை வலியுறுத்தும் வண்ணம் ஜிகே ரெட்டி பணிகளை மேற்கொள்கிறார். இதனை நடிகர் விஷால் அவர்கள் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தன் தந்தை உடன் இருக்கும் புகைப்படத்தை போட்டு மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

 தமிழ் சினிமாவில் டாப் ஹீரோவாக வலம் வருபவர் விஷால்.

அதில் அவர் கூறியிருப்பது, தனது தந்தையை நினைத்து பெருமைப்படுவதாகும், 82 வயதில் அவர் உடலை பிட்டாக வைத்திருப்பது எனக்கு ஊக்கம் அளிப்பதாகவும் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement