விஷ்ணு விஷால் மற்றும் ஜுவாலா குட்டாவின் திருமணம் நேற்று (ஏப்ரல் 22) மிகவும் சிம்பிளாக நடைபெற்றுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து வருபவர் நடிகர் விஷ்ணு விஷால். சமீப காலமாகவே இவர் வித்யாசமான கதை களத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் நடிப்பில் வெளியான “ராட்சசன்” திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. விஷ்ணு விஷால் ரஜினி நடராஜ் என்பவரை காதலித்து 2011 ஆம் ஆண்டு ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு ஆர்யன் என்ற மகனும் உள்ளார்.

சில ஆண்டுகளாகவே இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பின் இதன் காரணமாக 2017 ஆம் ஆண்டு ஆண்டு இவர்கள் இருவருக்கும் பரஸ்பரமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர். திருமணம் ஆகிக் கிட்டத்தட்ட 7 வருடங்கள் ஆன நிலையில் தன் மனைவி ரஜினியிடமிருந்து விவாகரத்து பெற்றுவிட்டார் நடிகர் விஷ்ணு. இது விஷ்ணு விஷால் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை தந்தது.

இதையும் பாருங்க : இத தான அன்னிக்கி சொன்னாங்க – ஜோதிகாவின் சர்ச்சை வீடியோவை தற்போது பகிரும் ரசிகர்கள்.

Advertisement

இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் கடந்தசில வருடங்களாக பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவுடன் காதலில் இருந்து வந்தார். இதனால் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டதாக கூட சர்ச்சை எழுந்தது. இந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 7ஆம் தேதி ஜுவாலாவின் பிறந்தநாளில் விஷ்னு, ஜுவாலாவை திருமணம் செய்து கொள்வதை உறுதி செய்தார்.

இப்படி ஒரு நிலையில் விஷ்னு விஷால் அறிவித்தபடி தனது இரண்டாம் திருமணத்தை நேற்று (ஏப்ரல் 22) மிகவும் சிம்பிளாக முடித்துள்ளார்.விஷ்ணு விஷால் தான் விவாகரத்து ஆனவர் என்று பார்த்தால் ஜுவாலாவும் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர் தான். பேட்மிட்டன் வீராங்கனையான ஜுவாலா, சேத்தன் ஆனந்த் என்ற பேட்மிட்டன் வீரரை கடந்த 2005 ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார். 6 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்து வந்த இவர்கள் இருவரும் பின்னர் 2011 ஆம் ஆண்டு ஜூன் 29 ஆம் தேதி விவகாரத்து பெற்று பிரிந்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கத்து.

Advertisement
Advertisement