இத தான அன்னிக்கி சொன்னாங்க – ஜோதிகாவின் சர்ச்சை வீடியோவை பகிரும் ரசிகர்கள்.

0
1028
Jyothika
- Advertisement -

இந்தியாவில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக கொரோனாவின் தாக்கத்தால் பலரும் அவதிப்பட்டு வருகின்றனர். தமிழகத்தை விட வட மாநிலங்களில் கொரோனாவின் இரண்டாம் அலையின் தாக்கம் அதிகரித்து தான் வருகிறது. இதனால் தமிழ் நாடு உட்பட பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கும் ஞாயிற்று கிழமை முழு நேர ஊரடங்கும் அமுலுக்கு வந்துள்ளது. இந்த கொடிய வைரஸால் பல லட்சம் பேர் இதுவரை பலியாகியுள்ளனர். கொரோனா தாக்கம் ஒரு புறம் இருக்க, பல மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவி வருகிறது. அதிலும் கொரோனா அதிகமாக பாதித்து வரும் குஜராத், மகாராஷ்ட்ரா போன்ற மாநிலங்களில் அனைத்து மருத்துவமனைகளிலும் ஏற்பட்டுள்ள ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

-விளம்பரம்-

இதனால் நோயாளிகள் அவதிப்படுவதும், உயிரிழப்புகள் அதிகமாகாவதும் நிகழ்ந்து வருகிறது. இதனால் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகப்படுத்த நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியிருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆக்ஸிஜன் சிலிண்டர் பற்றாக் குறை குறித்து பேசிய நீதிபதி ஒருவர், மக்களுக்குத் தேவையான மருத்துவ வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது அரசின் அடிப்படைக் கடமைகளில் ஒன்று. இதை மத்திய அரசாங்கம் சரியாக செய்ய வேண்டும். ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்குவதற்கு பிச்சை எடுத்தோ, திருடியோ, கடன் வாங்கியோ, அல்லது பணம் கொடுத்தோ, எதையோ செய்து, நோயாளிகளுக்கு மருத்துவ ஆக்சிஜன் சப்ளை செய்யுங்கள்,” என்று கூறினர்.

இதையும் பாருங்க : கோவில் கட்னவன் பாத்தா என்ன நெனப்பான் – கிளாமர் உடையில் நிதி அகர்வால் நடத்திய போட்டோ ஷூட்.

- Advertisement -

இப்படி கொரோனா தாக்கம் ஒரு புறம் இருக்க மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் இல்லாமல் பல ஆயிரம் நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் கடந்த ஆண்டு கோவில்களையும் மருத்துவமனைகளையும் ஒப்பிட்டு ஜோதிகா பேசியதை தற்போது நெட்டிசன்கள் பலரும் பகிர்ந்து வருகின்றனர். கடந்த ஆண்டு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஜோதிகா, தஞ்சாவூரில் அரசு மருத்துவமனையில் படப்பிடிப்பில் கலந்துகொண்டேன். அந்த மருத்துவமனையை மிக மேசமாக பராமரித்து வந்தனர். அங்கு நான் பார்த்தவற்றை என் வாயால் கூட சொல்ல முடியாது. அந்த அளவிற்கு கொடூரமாக இருந்தது.

எல்லோரும் கோயில் உண்டியலில் காசு போடுறீங்க, கோயிலை பெயின்ட் செய்து அழகாகப் பராமரிக்க உதவி செய்றீங்க.அதே மாதிரி அரசு மருத்துவமனைகளும், அரசுப் பள்ளிக்கூடங்களும் ரொம்பவே முக்கியம். மருத்துவமனையைப் பராமரிக்கவும் உதவுங்கள் என்று கூறியிருந்தார். ஜோதிகா, மருத்துவமனையை பராமரிக்க சொன்ன கருத்தை விட்டுவிட்டு கோவில் உண்டியலில் காசு போடாதீங்க என்று சொன்னதை பலரும் பெரிதாக எடுத்துக்கொண்டார்கள்.

-விளம்பரம்-

ஜோதிகாவின் இந்த கருத்திற்கு பல இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், ஜோதிகா பேசிய அடுத்த சில வாரங்களில் ஜோதிகா சொன்ன மருத்துவமனையில் விஷப் பாம்புகள் கூட பிடிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படி ஒரு நிலையில் நெட்டிசன்கள் பலர் ஜோதிகா, அன்று மருத்துவமனை பராமரிப்பு பற்றி சொன்ன வீடியோவை தற்போது நிலவி வரும் ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டுடன் ஒப்பிட்டு வருகின்றனர்.

Advertisement