தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஷ்ணு விஷால். இவர் ரஜினி நடராஜ் என்பவரை காதலித்து 2011 ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு ஆர்யன் என்ற மகனும் உள்ளார். சில ஆண்டுகளாகவே இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2017 ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் பரஸ்பரமாக விவாகரத்து பெற்று பிரிந்தார்கள். பின் விஷ்ணு அவர்கள் பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலாவை திருமணம் செய்து கொண்டார். இருந்தாலும், விஷ்ணு விஷால் தன்னுடைய மகன் ஆரியனை கவனித்து கொள்கிறார்.

அதேபோல் ஜுவாலாவும் ஆரியனை ஏற்றுக்கொண்டார். விஷ்ணு விஷால்- ஜுவாலாவுக்கு திருமணம் ஆகி நான்கு ஆண்டுகள் நிறைவடைந்து இருக்கிறது. மேலும், திருமண நாளிலேயே விஷ்ணு விஷால்- ஜுவாலாவிற்கு அழகான பெண் குழந்தை பிறந்திருக்கிறது. இந்த சந்தோஷமான செய்தியை விஷ்ணு விஷால் சோசியல் மீடியாவில் பகிர்ந்திருந்தார். இதை பார்த்து ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள்.
விஷ்ணு விஷால் மகள்:
நடிகர் விஷ்ணு விஷால் தன்னுடைய மகளுக்கு பெயர் சூட்டும் விழாவை ஹைதராபாத்தில் நடத்திருந்தார். இதில் பாலிவுட் நடிகர் ஆமீர்கான் கலந்து கொண்டிருந்தார். இப்படி இருக்கும் நிலையில் ஜுவாலா கட்டா செய்திருக்கும் செயல் தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்று வருகிறது. அதாவது, ஜுவாலா, தன்னுடைய 5 மாத குழந்தைக்கு கொடுத்த தாய்ப்பால் போக அதிகமாக சுரக்கும் தாய்ப்பாலை சுமார் 30 லிட்டர் வரை சேமிப்பு அதனை அரசு மருத்துவமனையில் இருக்கும் பச்சிளம் குழந்தைகளுக்கு தானமாக கொடுத்திருக்கிறார்.

விஷ்ணு விஷால் திரைப்பயணம்:
இவரின் இந்த செயலை பலருமே பாராட்டி வருகிறார்கள். மேலும் விஷ்ணு விஷால் அவர்கள் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த வெண்ணிலா கபடி குழு என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். முதல் படத்திலேயே அவர் மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டார். அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். சமீப காலமாக விஷ்ணு விஷால் அவர்கள் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
View this post on Instagram
விஷ்ணு விஷால் படங்கள்:
அந்த வகையில் இவரது நடிப்பில் வெளியான கட்டா குஸ்தி மற்றும் FIR ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. அதன் பின் இவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய லால் சலாம் என்ற படத்தில் நடித்து இருந்தார். இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. தற்போது இவருடைய நடிப்பில் உருவாகி இருக்கும் படம் மோகன்தாஸ். அதன் பின் இவர் இரண்டு வானம் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை ராட்சசன் பட இயக்குனர் ராம்குமார் இயக்கி இருக்கிறார். இதை அடுத்து இவர் கட்டா குஸ்தி 2 என்ற படத்தில் நடிக்க இருக்கிறார்.






