கை தாங்களாக வந்து விவேக் மறைவிற்கு அஞ்சலி செலுத்திய கவுண்டமணி - வீடியோ இதோ. (எப்படி இருந்த மனுஷன் )

By Rajkumar · 17/4/2021

தமிழ் சினிமாவின் காமெடி ஜாம்பவான்களில் ஒருவராக திகழ்ந்து வந்த விவேக் இன்று (ஏப்ரல் 17 ) காலமாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக தன்னுடைய நகைச்சுவை திறமையினால் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார் நடிகர் விவேக். நகைச்சுவையின் மூலம் தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் விவேக்.நடிகராக மட்டுமல்லாமல் பல்வேறு சமூதாய விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வரும் விவேக் லட்ச கணக்கான மரங்களை நட்டுள்ளார். இப்படி ஒரு நிலையில் நேற்று (ஏப்ரல் 16) நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

https://twitter.com/filmistreet/status/1383270888972296196

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள விவேக்கை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். நடிகர் வீட்டில் இருந்த போது அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டடு நெஞ்சிவலி ஏற்பட்டுள்ளது இதனால் அவரது குடும்பத்தினர் அவரை Sims மருத்துவமனையில் அனுமதித்தனர்.அவருக்கு முதலுதவி அளித்த மருத்துவர்கள் இதயத்திற்கு செல்லும் இரத்தக் குழாயில் 100 சதவீத அடைப்பு இருந்துள்ளதை கண்டு பிடித்தனர்.

இதையும் பாருங்க : அவனுக்கு நேரில் அஞ்சலி செலுத்த என்னால முடியல. ஏன்னா - விவேக் மறைவு குறித்து கண்ணீருடன் வீடியோ வெளியிட்ட வடிவேலு.

இதனால் அவருக்கு, Catheterization எனப்படும் இரத்தக் குழாயில் ஏற்பட்ட அடைப்பை சரி செய்ய ஸ்டென்ட் வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது . இந்நிலையில் இன்று (ஏப்ரல் 17) காலை 4.35 மணியளவில் சிகிச்சை பலனின்றி விவேக் காலமானார். அவருடைய மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.விவேக்கின் உடல் விம்ருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. திரையுலக பிரபலங்கள் பலரும் நேரில் சென்று விவேக்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

https://www.youtube.com/watch?v=LHTxfw5Iguo

அந்த வகையில் விவேக்குடன் பல படங்களில் நடித்த நடிகர் கௌண்டமணி விவேக்கின் மறைவிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். மிகவும் மெதுவாக நடந்து வந்த கௌண்டமணியை உடன் வந்தவர் கை தாங்களாக கூட்டி வந்ததை பார்க்கும் போது பலரும் நெகிழ்ச்சியில் ஆழ்ந்தனர். நடிகர் கௌண்டமணி உடல் நலக் குறைவால் பல ஆண்டுகளாக சினிமாவில் நடிக்காமல் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full