அவனுக்கு நேரில் அஞ்சலி செலுத்த என்னால முடியல. ஏன்னா – விவேக் மறைவு குறித்து கண்ணீருடன் வீடியோ வெளியிட்ட வடிவேலு.

0
1814
vivek
- Advertisement -

மறைந்த நடிகர் விவேக் குறித்து கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டுள்ளார் அவரின் நண்பரும் நடிகருமான வடிவேலு. நடிகர் வடிவேலுவும் விவேக்கும் பல்வேறு படங்களில் ஒன்றாக இணைந்து நடித்து உள்ளார்கள். சினிமாவையும் தாண்டி தனிப்பட்ட வாழ்க்கையில் இவர்கள் இருவரும் வாடா போடா என்று கூப்பிட்டுக்கொள்ளும் அளவிற்கு நண்பர்கள் தான். இப்படி ஒரு நிலையில் விவேக்கின் மறைவு செய்தியை கேட்டு நடிகர் வடிவேலு கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பேசி உள்ள வடிவேலு, இன்னிக்கு காலையில என்னுடைய நண்பன் விவேக் மாரடைப்பால் இறந்து விட்டான் என்ற செய்தியைக் கேட்டு மிகவும் அதிர்ச்சி அடைந்துவிட்டேன்.

-விளம்பரம்-

அவனும் நானும் நிறைய படங்களில் இணைந்து பணியாற்றி இருக்கிறோம். அவனைப்பற்றி பேசும் போது துக்கம் தொண்டையை அடைக்கிறது. ரொம்ப நல்லவன். உதவுற சிந்தனை அதிகம் உள்ளவன். அப்துல் கலாய் ஐயா உடன் நல்ல நெருக்கமாக இருப்பான். அதே மாதிரி விழிப்புணர்வு பிரச்சாரம், மரம் நடுவது என இப்படி விஷயம் பண்ணுவான். ரொம்ப உரிமையாக என்னடா வடிவேலு, என்ன விவேக்கு என்று பேசிக் கொள்வோம்.

இதையும் பாருங்க : நடிகர் விவேக்கின் மறைவு குறித்து உருக்கமுடன் பதிவிட்ட கமல் – (இந்தியன் 2 வரத்துக்குள்ள இப்படி ஆகிடிச்சே)

- Advertisement -

அவனை மாதிரி ஓப்பனாக பேசக் கூடிய ஆளே கிடையாது. எத்தனையோ கோடிக்கணக்கான ரசிகர்களில் அவன் எனக்கு ஒரு ரசிகன். நான் அவனுக்கு ரசிகன். அவன் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் மனதில் பதியுற மாதிரியே இருக்கும். என்னைவிட எதார்த்தமாக, எளிமையாகப் பேசுவான். அவனுக்கு இப்படியொரு மரணம் என்பது ரொம்ப கஷ்டமாக இருக்கிறது.

Vivek: No one impacted meme creators like Vadivelu

என்னால் முடியல. இந்த நேரத்தில் என்ன பேசுவதென்று தெரியல. அவனுக்கு நேரில் அஞ்சலி செலுத்த என்னால முடியல. ஏன்னா. நான் மதுரையில் தாயாருடன் இருக்கேன். என்னோட நெஞ்சார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். விவேக்கின் குடும்பத்தினர் தைரியமாக இருக்க வேண்டும். விவேக் எங்கும் சென்றுவிடவில்லை. உங்களுடன் தான் இருக்கிறான். மக்களோடு மக்களாக நிறைந்திருக்கிறான். அவனுடைய ஆன்மா சாந்தியடைய வேண்டும் என்று கண்ணீருடன் கூறியுள்ளார் வடிவேலு.

-விளம்பரம்-
Advertisement