தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக தன்னுடைய நகைச்சுவை திறமையினால் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார் நடிகர் விவேக். நகைச்சுவையின் மூலம் தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் விவேக். இவரின் காமெடியில் நகைச்சுவையும், சமூக சிந்தனையும் இருக்கும். அதனால் தான் இவரை மக்கள் ‘சின்ன கலைவாணர்’ என்று அழைத்து வருகின்றனர். இவர் மேடை நகைச்சுவை கலைஞராக தான் தனது பயணத்தை தொடங்கினார்.

இவர் 1987 ஆம் ஆண்டு தொடங்கி இன்று வரை படங்களில் பிசியாக நடித்து கொண்டு இருக்கிறார்.மேலும், விவேக் எப்பொழுதுமே ட்விட்டரில் ஆக்டிவாக இருப்பவர். நாட்டு நடப்பு, சினிமா என்று பல விஷயங்கள் பற்றி பேசி வருகிறார். வெறும் காமெடி நடிகராக மட்டுமல்லாமல் பல படங்களில் விவேக் குணச்சித்திர நடிகராகவும் நடித்துள்ளார். இறுதியாக இவர் நடிப்பில் வெளியான வெள்ளை பூக்கள் படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது.

Advertisement

விவேக்கின் படங்களில் வரும் காமெடிகளில் சமூக கருத்துக்களை சொல்வது வாடிக்கையான ஒரு விஷயம் தான். அதனால் தான் இவரை சின்னக் கலைவாணர் என்றும் பட்டப் பெயர் இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் மாதவன் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் படமான ‘ரன்’ படத்தில் விவேக் நடித்த காட்சியை விமர்சித்து ட்விட்டர் வாசி ஒருவர் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில், எனக்கு விவேக் அவர்கள் மீது நடிகனாகவும் இயற்கை ஆர்வளராகவும் மிக்க மரியாதை உண்டு! ஆனால், இதுபோன்று பெற்றொரை இழிவு படுத்தும் அவரின் சில காமெடிகளை சகித்துக்கொள்ள முடியவில்லை!

இது அவர் மீதான என் விமர்சனம் இல்லை! என் தனிப்பட்ட கருத்து! மூடநம்பிக்கை மீதான அவரின் கருத்துக்கள். இதற்கு பதில் அளித்துள்ள விவேக், பெற்றோரை இழிவு படுத்திய காரணத்தால் கடைசியில் கூவத்தில் விழுந்து,ஒரு கிட்னி இழந்து, தெருவில் குஷ்ட ரோகி பிச்சைக்காரனுடன் படுத்து கிடக்கும் அவல நிலை ஏற்பட்டது. இதுவே முடிவு கருத்து என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement

Advertisement
Advertisement