இந்த ஆண்டு திருமணத்தை முடித்த யோகி பாபுவிற்கு குழந்தை பிறந்துள்ளது. தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் யோகி பாபு. இவர் ரஜினி, அஜித், விஜய் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். ஆரம்பத்தில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் தற்போது முன்னணி நடிகர்களின் படத்தில் முக்கிய காமெடி நடிகராக நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் தற்போது பல்வேறு படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார் யோகி பாபு.

இந்த ஆண்டு மட்டும் இவரது நடிப்பில் 20 க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் கைவசம் வைத்து இருக்கிறாராம் யோகி பாபு.நடிகர் யோகி பாபுவிற்கு திருமணம் எப்போ?எப்போ? என்று பல கேள்விகள் சோசியல் மீடியாவில் வந்து இருந்தது. தற்போது ஒரு வழியாக நடிகர் யோகி பாபு அவர்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடந்து முடிந்தது. இவர் வேலூரை சேர்ந்த மஞ்சு பார்கவி என்கிற பெண்ணை கடந்த பிப்ரவரி மாதம் 5 ஆம் திருமணம் செய்து கொண்டார்.
யோகி பாபு அவர்களுடைய குலதெய்வ கோவிலில் மிகவும் சிம்பிளாக தன்னுடைய திருமணத்தை செய்து கொண்டார். இந்த திருமணத்தில் திரை பிரபலங்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை.நெருங்கிய உறவினர் மற்றும் சொந்தங்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.திருமணத்தை எளிமையாக முடித்தாலும் யோகிபாபு பல்வேறு பிரபலங்களை அழைத்து ரிசப்ஷன் வைக்கலாம் என்று திட்டமிட்டிருந்தார். ஆனால் கொரோனா பிரச்சினை காரணமாக அதுவும் நடக்கவில்லை.
https://twitter.com/manobalam/status/1343510169490059270
இப்படி ஒரு நிலையில் யோகி பாபுவின் மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்தள்ளது. இந்த தகவலை நடிகர் மனோ பாலா தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இறுதி வரை யோகி பாபு திட்டமிட்டது போல திருமண ரிஷப்ஷன் நடைபெறவில்லை ஆனால், அதற்குள்ள அப்பாவே ஆகிட்டார் யோகி பாபு.





