தம்பியின் காதலுக்கு பச்சைக்கொடி காட்டிய யோகி பாபு, சொந்த ஊரில் எளிமையாக நடந்த திருமணம்.

0
419
- Advertisement -

தன்னுடைய தம்பியின் காதலுக்கு கிரீன் சிக்னல் கொடுத்து யோகிபாபு திருமணம் செய்து வைத்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்பவர் யோகி பாபு. இவரின் தம்பி பெயர் விஜயன். இவருக்கு சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்று ஆசை. இதனால் இவர் தன்னுடைய அண்ணன் வழிகாட்டுதலில் இருக்கிறார். யோகி பாபுவும் தனக்கு தெரிந்த நண்பர்களின் மூலம் வாய்ப்பு கேட்டு பேசிக் கொண்டிருக்கிறார்.

-விளம்பரம்-

தற்போது விஜயன் தன்னுடைய அண்ணனுடைய கால்ஷீட் விஷயங்கள் தொடர்பாக பார்த்துக் கொண்டு அண்ணனுடன் தான் விஜயனும் இருக்கிறார். இப்படி இருக்கும் போது சில வருடங்களுக்கு முன்பு சோசியல் மீடியா மூலம் மைசூரை சேர்ந்த பெண் ஒருவர் உடன் விஜயனுக்கு அறிமுகம் ஏற்பட்டிருக்கிறது. பேஸ்புக் மூலம் தான் இவர்களுடைய நட்பு முதலில் உருவானது. அதற்கு பிறகு சில நாட்களில் இவர்களின் நட்பு காதலாக மாறியது.

- Advertisement -

யோகிபாபு தம்பி காதல்:

மேலும், அந்தப் பெண் படுகா சமூகத்தை சேர்ந்தவர். இதனால் ஆரம்பத்தில் அவருடைய வீட்டில் காதலுக்கு சம்மதம் சொல்லவில்லை. இன்னொரு பக்கம் யோகி பாபு தம்பி தன்னுடைய காதலில் உறுதியாகவும் நம்பிக்கையாகவும் இருந்தார். இதனால் நேரடியாகவே யோகிபாபு அந்த பெண் வீட்டாரை சந்தித்து சம்மதம் வாங்கினார். கடைசியில் இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த மூன்றாம் தேதி தான் யோகி பாபுவின் சொந்த ஊரான செய்யாற்றில் எளிமையாக தன்னுடைய தம்பியின் திருமணத்தை நடத்தி இருந்தார்.

யோகிபாபு தம்பி திருமணம்:

இந்த திருமணத்தில் யோகிபாபுவின் குடும்ப உறுப்பினர்கள், நெருங்கிய நண்பர்கள் மட்டும் கலந்து இருக்கிறார்கள். தற்போது இந்த தகவல் இணையத்தில் வெளியானதை தொடர்ந்து பலரும் யோகிபாபுவின் தம்பிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். தமிழ் சினிமாவில் தற்போது தவிர்க்க முடியாத காமெடி நடிகர்களில் பட்டியலில் யோகி பாபு பெயர் தான் முதலிடத்தில் இருக்கும்.

-விளம்பரம்-

யோகிபாபு திரைப்பயணம்:

இவர் ரஜினி, அஜித், விஜய் என தமிழ் சினிமாவின் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார். ஆரம்பத்தில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் தற்போது முக்கிய காமெடி நடிகராக நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் சமீப காலமாக இவர் பல படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் ஹீரோவாக நடித்த ‘மண்டேலா’ படம் பல விருதுகளை பெற்று இருந்தது.

யோகிபாபு படங்கள்:

இந்த படத்திற்கு தேசிய விருதும் கிடைத்து இருந்தது. இதனை அடுத்து இவர் பல படங்களில் கமிட்டாகி நடித்து இருக்கிறார். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியாகி இருந்த எல்ஜிஎம், ஜெயிலர், லக்கி மேன் படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறார். இதை அடுத்து இவர் பிஸியான நடிகராக வலம் வந்து கொண்டு இருக்கிறார்.

Advertisement