சினிமா என்றாலே நடிப்பு, அழகு, ஆக்சன் ஆகியவற்றால் பலபேர் பிரபலமடைந்து இருக்கிறார்கள். ஆனால், இதையெல்லாம் தாண்டி பலர் தங்களின் குரல் வளத்தினால் சினிமா உலகில் பிரபலம் அடைந்து உள்ளனர். பொதுவாகவே சினிமா உலகில் நடிகர், நடிகைகளுக்கு மொழி மற்றும் குரல் பிரச்சினைகளால் டப்பிங் ஆர்டிஸ்ட் குரல் கொடுப்பார்கள். இது காலங்காலமாக நடந்து வருகின்ற ஒன்று. ஆனால், சிலர் தங்களுடைய தனித்துவமான சொந்த குரலில் பேசி ரசிகர்களின் மனதில் இடமும் பிடித்து இருக்கிறார்கள். அந்த வகையில் தங்களுடைய குரல் வளத்தால் மக்கள் மத்தியில் பிரபலமடைந்த நடிகர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

சுருளிராஜன்:

தமிழ் சினிமா உலகில் பிரபலமான நகைச்சுவை நடிகராக திகழ்ந்தவர் சுருளிராஜன். இவர் 60,70 காலகட்டத்தில் பல படங்களில் நடித்திருக்கிறார். இவரின் தனித்துவமான குரலால் பலரையும் சிரிக்க வைத்திருக்கிறார். சினிமாவில் புகழின் உச்சத்தில் இருக்கும் போதே தன்னுடைய 42 வயதில் 1980 உடல் நலக்குறைவால் காலம் காலமானார்.

Advertisement

கல்லாப்பெட்டி சிங்காரம்:

இவர் சற்று வித்தியாசமான குரல் வளம் உடையவர். பெரும்பாலும் இவர் இயக்குனரும், நடிகருமான பாக்யராஜ் திரைப்படங்களில் தான் நடித்திருக்கிறார். சுவரில்லாத சித்திரங்கள், டார்லிங் டார்லிங் டார்லிங், எங்க ஊரு பாட்டுக்காரன், பூவிலங்கு போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து இருக்கிறார். இவருடைய குரலின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக பேசப்பட்டார்.

மொட்டை ராஜேந்திரன்:

தமிழ் சினிமா உலகில் பிரபலமான நகைச்சுவை மற்றும் வில்லனாக நடித்துக் கொண்டிருப்பவர் மொட்டை ராஜேந்திரன். இவருடைய குரலும், மொட்டை மூலமாகவே மக்கள் மத்தியில் படு ஃபேமஸ் ஆனார். இவருடைய குரலை பலரும் தற்போது மிமிக்ரி செய்து கொண்டிருக்கின்றார்கள். ராஜா ராணி, சிங்கம்-2, இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, நானும் ரவுடிதான் போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் இவருடைய பேச்சை கேட்டு பலரும் சிரிப்பார்கள். அந்த அளவிற்கு குரல் வளம் உடையவர்.

Advertisement

விடிவி கணேஷ்:

‘இங்க என்ன சொல்லுது ஜெசி ஜெசி சொல்லுதா’ என்ற வசனத்தின் மூலம் பிரபலமானவர் விடிவி கணேஷ். இவருடைய பாஷை மற்றும் குரல் தமிழ் சினிமாவிலேயே சற்று வித்தியாசமாக இருக்கும். இதனாலேயே இவர் விரைவில் தமிழக மக்கள் மத்தியில் இடம் பிடித்தார். பெரும்பாலும் சிம்புவின் படங்களில் தான் இவர் நடித்திருப்பார். அதுமட்டுமில்லாமல் இவர் சில படங்களைத் தயாரித்துள்ளார். இவருடைய தயாரிப்பில் உருவான விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் இவர் ரசிகர்கள் மத்தியில் பரிச்சயம் ஆனார். இந்த படமும் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருந்தது.

Advertisement

அர்ஜுன் தாஸ்:

தற்போது தென்னிந்திய சினிமா உலகில் மிரட்டும் வில்லனாக கலக்கிக் கொண்டிருப்பவர் அர்ஜுன் தாஸ். கார்த்தியின் கைதி படத்தில் வில்லனாக அன்பு கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமானவர். தனது பேஸ் பாரிடோன் குரலுக்காக ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார். தற்போது இவர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து கமலஹாசனின் விக்ரம் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் கூடிய விரைவில் வெளியாக உள்ளது. அதுமட்டுமில்லாமல் இவர் பிற மொழி படங்களிலும் மிரட்டிக்கொண்டு வருகிறார்.

ரகுவரன்:

என்றென்றும் தமிழ் சினிமா உலகில் மறக்க முடியாத குரலில் ஒன்று ரகுவரன். இவருடைய குரலுக்காகவே எக்கச்சக்கமான ரசிகர்கள் உள்ளார்கள். 80ஸ் காலகட்டம் தொடங்கி தூக்கி 2k காலகட்டம் வரையிலான ரசிகர்களுக்கு ரகுவரன் பற்றி நன்றாக தெரிந்திருக்கும். அதிலும் 90ஸ் ரசிகர்களுக்கு நடிகர் ரகுவரன் ஒரு மிரட்டலான வில்லனாக இருந்தார். இவர் ஆரம்பத்தில் ஹீரோ மற்றும் துணை கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். அதன் பின்னர் வில்லனாக நடிக்க துவங்கினார். ஆனால், ஹீரோ கதாபாத்திரத்தை விட வில்லன் கதாபாத்திரம் இவருக்கு நன்றாக பொரிந்தியது. தற்போது இவர் இல்லை என்றாலும் இவருடைய குரல் இன்னும் சினிமா உலகில் பேசப்பட்டு தான் இருக்கிறது.

விணுசக்கரவர்தி:

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்தவர் வினுசக்கரவர்த்தி. இவர் நடிகர் மட்டுமில்லாமல் எழுத்தாளரும் ஆவார். இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பிற மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். அதோடு இவர் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். மேலும், இவர் படங்களில் நகைச்சுவை, குணச்சித்திர, வில்லன் கதாபாத்திரங்களில் தான் நடித்து இருக்கிறார். அதிலும் இவரின் நடிப்பை விட குரல் மக்கள் மத்தியில் படு பேமஸ் என்று சொல்லலாம்.

Advertisement