பிரபல நடிகையான பறவை முனியாம்மா கடந்த சில காலமாக உடல் நல குறைவால் அவதிபட்டு வருகிறார். உடல் நல குறைவால் இருந்து வந்த பறவை முனியம்மாவிற்கு ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது ரூ.6 லட்சம் வைப்பு நிதி வழங்கி மாதந்தோறும் ரூ. 6000 ஆயிரம் வட்டியாக வருவாய் கிடைக்க ஏற்பாடு செய்தார். ஆனால், அந்த பணமும் அவரது வைத்திய செலவிற்கே சரியாக போனது. பறவை முனியம்மாவில் நிலையை அறிந்த சிவகார்த்திகேயன் நேரில் சந்தித்து கொஞ்சம் பணமும் கொடுத்து உதவினார்.

Advertisement

அவருக்கு பின்னர் எந்த ஒரு நடிகரும் பறவை முனியம்மாவை நேரில் சென்று சந்திக்கவில்லை. இந்த நிலையில் பறவை முனியம்மாவின் நிலையை அறிந்த பட்டதாரி பட நடிகர் அபி சரவணன் நேரில் சென்றுஅவரை விசாரித்ததோடு சிகிச்சைக்கு கொஞ்சம் பண உதவியும் செய்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் தீபாவளியை நான் பரவை முனியம்மாவுடன் கொண்டாடலாம் என்று தான் நினைத்தேன். ஆனால், அதற்குள்ளாக சுஜித் விஷயத்தை கேள்விப்பட்டு அங்கே சென்று விட்டேன். அதை முடித்துவிட்டு நேற்று காலை தான் அம்மாவின் வீடு தேடி சென்று அவரை நேரில் பார்த்தேன். என்னை பார்த்து அவர் மிகவும் சந்தோஷப்பட்டார். மேலும், 80 படங்களில் நடித்துவிட்டேன் இதுவரை யாரும் வந்து என்ன பாக்கல சிவகார்த்திகேயன் மட்டும்தான் என்ன வந்து பார்த்து 30 ஆயிரம் ரூபா கொடுத்துட்டு போனாரு அவருக்கு அப்புறம் நீ தான் வந்து இருக்கேஎன்று மகிழ்ச்சி பொங்க கூறியதாக அபி சரவணன் கூறியுள்ளார்.

பரவை முனியம்மாவை நேரில் சந்தித்து ஆறுதல் மட்டும் கூறாமல் அவரது நிலையைக் கண்டு மனம் வருந்தி உள்ள அபி சரவணன் தனது கையிலிருந்த எட்டாயிரம் ரூபாய் பணத்தை கொடுத்துவிட்டு, பரவை முனியம்மாவின் சிகிச்சைக்கு ஆகும் செலவு தானே ஏற்றுக் கொண்டதாகவும் கூறியிருந்தார். இப்படிபட்ட நடிகரின் வாழ்வில் அவரது மனைவியால் பல்வேறு பிரச்சனைகள் நடந்தேறி வருகிறது. அபி சரவணன், பட்டதாரி படத்தில் தன்னுடன் நடித்த அதிதி மேனனை காதலித்து திருணம் செய்து கொண்டார்.

Advertisement

ஆனால், அதிதி மேனனோ, எனக்கும் அபி சரவணனுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், அபி சரவணன் தன்னிடம் பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுவதாகவும் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். ஆனால், அபி சரவணன், அதிதியை திருமணம் செய்ததற்கான ஆதாரங்களை காவல் நிலையத்தில் சமர்பித்திருந்தார். மேலும், தனது மனைவி தன்னிடம் இருந்த பணம், நகை எல்லாவற்றயும் திருடிக்கொண்டு கேரளாவில் உள்ள அவரது சொந்த வீட்டிற்கு சென்று விட்டதாகவும் புகார் அளித்திருந்தார்.

Advertisement

இது ஒருபுறமிருக்க நடிகை அதிதி, கணவனிடம் இருந்து தனக்கு விவாகரத்து வேண்டும் என்று நீதிமன்றத்தில் கூறியுள்ளார். மேலும், நீதிபதி கௌன்சிலிங்கிற்கு அதிதியை அனுப்ப கூறியதால், இந்த வழக்கை உயர் நீதி மன்றத்திற்கு மாற்றி கொள்கிறேன் என்றும் வழக்கறிஞ்சர் முழ தெரிவித்துள்ளார். இந்த வழக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் நீதிமன்ற விசாரணைக்கு வந்துள்ளது அப்போது நீதிபதி, நடிகை அதிதி மேனன் இந்த வழக்கு, விசாரணைக்கு வரும்போது நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். அதேபோல விவாகரத்துக்கு முன்பாக அதிதி மேனன் கவுன்சிலுக்கு செல்லவேண்டும் என்றும், அவர் நீதிமன்றத்தில் சட்டதிட்டங்களுக்கு கட்டுப்படவேண்டும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement