அட, அட்டகத்தி படத்தில் வந்த இந்த நடிகை, இதே படத்தில் நடித்த இவரின் அண்ணி தானா.

0
4051
divya
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் அட்டகத்தி தினேஸும் ஒருவர். 2012 ஆம் ஆண்டு வெளிவந்த அட்டகத்தி படத்தின் மூலம் தான் இவர் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார். இந்த படத்தின் மூலம் இவர் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். அதிலிருந்தே இவரை அனைவரும் அட்டகத்தி தினேஷ் என்று தான் அழைக்கிறார்கள். 2012 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தின் மூலம் தான் இயக்குனர் ரஞ்சித்தும் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

-விளம்பரம்-

இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும், இந்த படத்தின் ஒரு காட்சியில் திவ்யா, நதியா என்று இரண்டு பெண்கள் நடித்திருப்பார்கள். அந்த காட்சியில் திவ்யா என்ற கதாபாத்திரத்தில் வரும் நடிகை வெறு யாரும் இல்லை, இதே படத்தில் நடித்த நடிகை ஐஸ்வர்யாவின் அண்ணி தான்.

- Advertisement -

ஐஸ்வர்யா ராஜேஷ் பற்றி பல விஷயங்கள் அறிந்திருந்தாலும் அவருக்கு இரண்டு சகோதரர்கள் இருக்கிறார் என்பது பலரும் அறிந்திடாத ஒரு விஷயம். அதில் ஒரு சகோதரர், ஐஸ்வர்யா ராஜேஷின் சிறு வயதிலேயே இறந்து விட்டார். மற்றொரு சகோதரரான மணிகண்டன், சீரியல்களில் நடித்து வருகிறார். வள்ளி, கேளடி கண்மணி, அழகு சீரியல்களில் நடித்துள்ளார்.

இவரது மனைவி தான் அட்டகத்தி படத்தில் திவ்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்த நடிகை சோபியா. இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கிறார். மேலும், இவர் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த ‘லட்சுமி’ படத்திலும் நடன ஆசிரியராக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement