தென்னிந்திய சினிமா திரை உலகில் 80 கால கட்டங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை அமலா. மேலும், அப்போது இருந்து இப்போது வரை நடிகை அமலாவுக்கு என தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இவர் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என பல மொழி திரைப் படங்களில் நடித்து உள்ளார். மேலும், திருமணம் ஆகி சில காலமாக நடிகை அமலா திரை உலகை விட்டு தன் குடும்பத்திலேயே அதிக கவனம் செலுத்தி வந்து இருந்தார். அது மட்டும் இல்லாமல் நடிகை அமலா அவர்கள் தற்போது கூட படத்தில் குணச்சித்திர வேடங்களிலும், நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நடிகை அமலா அவர்கள் சினிமா துறைக்கு வருவதற்கு முன்னர் அவருடைய வாழ்க்கையில் ஆரம்ப கட்டத்தில் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் கஷ்டப்பட்டு உள்ளார் என்ற பல தகவல்கள் வந்து உள்ளது.

Advertisement

நடிகை அமலா அவர்கள் ஐரிஷ் தாய்க்கும், பெங்காலி தந்தைக்கும் மகளாகப் பிறந்தவர். இவருடைய தந்தை ஒரு விமான கடற்படை அதிகாரியாக பணி புரிந்தவர். அது மட்டும் இல்லாமல் பல ஊர்களுக்கு சென்று சுற்றி திரிந்து கொண்டிருப்பாரம். அதனால் சென்னையில் ஒரு கல்லூரியில் ஹாஸ்டலில் தங்கி படிக்க வேண்டிய சூழ்நிலை நடிகை அமலாவுக்கு ஏற்பட்டது. அதுமட்டும் இல்லாமல் நடிகை அமலாவின் அப்பாவுக்கும், அம்மாவுக்கும் இடையே சில கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரியும் சூழ்நிலை ஏற்பட்டது. இந்நிலையில் நடிகை அமலா அவர்கள் சாப்பாட்டுக்கு வழி இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்ட நிலையில் இருந்து உள்ளார். மேலும்,இவருக்கு நடனத்தில் அதிக ஆர்வம் உண்டு. அதனால் அவர் நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று தன்னுடைய சாப்பாடு செலவை பார்த்துக் கொண்டு வந்து உள்ளார்.

இதையும் பாருங்க : என்னை மன்னிச்சி ஏத்துப்பீங்களா. பாலுமஹிந்தராவின் முதல் மனைவியிடம் கெஞ்சிய ஆயுத எழுத்து சீரியல் நடிகை.

இந்நிலையில் தான் சினிமா உலகில் பிரபல நடிகரும், தயாரிப்பாளரும்,இயக்குனருமான டி. ராஜேந்திரன் அவர்கள் அமலாவை பார்த்து உள்ளார். பின் அவர் “மைதிலி என்னை காதலி” என்ற திரைப் படத்தில் அமலாவை நடிக்க வைத்து உள்ளார். அதோடு நடிகை அமலா அவர்களுக்கு ஆரம்பத்தில் நடிக்க தெரியாது என தயங்கி நின்றார். மேலும், எனக்கு அது தான் வேண்டும் என அவரை ஊக்கப்படுத்தி நடிக்க சொல்லி எல்லாம் கற்றுக் கொடுத்தது எல்லாம் டி. ராஜேந்திரன் தான். பின் படங்களில் வாய்ப்பு அளித்ததும் டி ராஜேந்திரன் அவர்கள் தான். அதற்குப் பிறகு தான் நடிகை அமலா அவர்கள் தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக விளங்கி வந்தார்.

Advertisement

Advertisement

தெலுங்கு மொழியில் முன்னணி நடிகரான நாகார்ஜுனா அவர்களை காதலித்து 1992 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். தற்போது இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளார்கள். அவர்களும் சினிமாவில்மிக பிரபலமான ஹீரோக்கள் தான். மேலும், நடிகை அமலா அவர்கள் குடும்ப தலைவியாகவும், பொறுப்பான அம்மாவாகவும் சந்தோஷமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். எப்போதும் அவருடைய வாழ்வில் டி. ராஜேந்திரன் செய்த உதவியை மறக்க மாட்டேன் என கண் கலங்கி கொண்டு உணர்ச்சி வசமாக அடிக்கடி கூறி உள்ளார்.

Advertisement