என்னை மன்னிச்சி ஏத்துப்பீங்களா. பாலுமஹிந்தராவின் முதல் மனைவியிடம் கெஞ்சிய ஆயுத எழுத்து சீரியல் நடிகை.

0
83829
mounika

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை மெளனிகா. தற்போது நடிகை மௌனிகா அவர்கள் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த பல விஷயங்களை பகிர்ந்து உள்ளார். அதிலும் என்னை மன்னித்துவிடுங்கள் அகிலம்மா என்றும், என்னை ஏற்றுக் கொள்ளுங்கள் என்றும் மனப்பூர்வமாக பேசி உள்ளார். மேலும், நடிகை மௌனிகா சினிமா உலகில் கொஞ்சம் படங்கள் நடித்திருந்தாலும் ரசிகர்கள் மனதில் தற்போது வரை நீங்காமல் இடம் பிடித்தவர். மேலும், இயக்குனர் பாலு மகேந்திரா மூலம் தான் சினிமாவில் அறிமுகம் ஆனார். பின்னர் பாலுமகேந்திராவை திருமணமும் செய்து கொண்டார். பின்னர் சில காலமாகவே அவர் சினிமா பக்கம் எட்டிப் பார்க்காமல் இருந்தார். தற்போது சீரியல்களில் நடிக்க தொடங்கியுள்ளார். மேலும், அவர் தன்னுடைய வாழ்க்கை ரகசியங்களை பற்றி ஒரு பேட்டியில் பகிர்ந்து உள்ளார்.

மௌனிகா

- Advertisement -

அவர் கூறியது, நான் கடைசியாக ஏ.வி.எம் தயாரித்த “சொர்க்கம்” என்ற சீரியலில் தான் நடித்திருந்தேன். மேலும், நான் சீரியல்களிலும், சினிமாக்களிலும் அமைதியான கதாபாத்திரங்கள் தான் எனக்கு கிடைத்தது. ஆனால், தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘ஆயுத எழுத்து’ சீரியலில் காளியம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறேன். மேலும், இந்த மாதிரியான ‘தாதா’ கதாபாத்திரத்தில் நடிப்பது இது தான் முதல் தடவை. மேலும், இந்த கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இந்த கதாபாத்திரமாகவே எண்ணை கொண்டு வந்தது ரமணகிரிவாசன். ‘இப்படித் தான் இருக்கணும்’, ‘இப்படி தான் பண்ணனும்’, ‘இப்படி தான் பேசணும்’ என பல விஷயங்களை எனக்கு சொல்லித் தந்தவர்.

நான் முதலில் ஒரு சின்ன பிசினஸ் வேலையில் பிஸியாக இருந்ததால் படத்தில் நடிக்க வரவில்லை. அதுமட்டுமில்லாமல் என் வாழ்க்கையில் பல சோகங்களும், பரபரப்புகளும் நடந்ததால் என்னால் நடிக்க வர முடியவில்லை. மேலும், நான் என் வாழ்க்கையில் அதிகமாக நேசித்தது இரண்டு பேரை மட்டும் தான். ஒன்று என் கணவர் பாலுமகேந்திரா. இன்னொன்னு என் சகோதரி மகள் உதயா. அதுமட்டுமில்லாமல் என் வயிற்றில் பிள்ளை பெறுகிற பாக்கியமும் கிடைக்கவில்லை, வளர்த்த பிள்ளையும் என் கூட இருக்கும் பாக்கியமும் பெறவில்லை. உதயா என்னுடைய அக்கா வயிற்றில் பிறந்தவள். மேலும், சின்ன குழந்தையில் தவழ்ந்து, வளர்ந்து, ஓடியாடி விளையாடுவது எல்லாம் என்னுடன் தான்.

-விளம்பரம்-
மௌனிகா

மேலும், எங்களுக்கு குழந்தை இல்லை என்ற கவலையை தீர்த்து வைத்தவளும் அவள் தான். அதுமட்டுமில்லாமல் ஒரு விபத்தில் உதயா மிக மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதித்து இருந்தார். பின் 2014ஆம் ஆண்டு அவள் இறந்துவிட்டாள். அவள் என்னை விட்டுப் போனதில் இருந்தே நான் மிகவும் பாதிக்கப்பட்டேன். அதற்கு பின்னர் தான் கொஞ்சம் கொஞ்சமாக நான் வெளியே வர தொடங்கினேன். இப்போ நான் சீரியலில் நடித்துக் கொண்டிருப்பதினால் தான் அந்த பழைய நினைவுகளை மறந்து கொண்டு வருகிறேன். சினிமாவில் பல படங்களில் நடிக்க கேட்டார்கள். ஆனால், எனக்கு அப்போது இருந்த மனநிலை சரியில்லாத காரணத்தினால் நான் நடிக்க மறுத்துவிட்டேன்.

தற்போது தனுஷ் நடிப்பில் வெளிவந்த அசுரன் படத்தில் கூட நடிக்க வெற்றிமாறன் கேட்டிருந்தார். ஆனால், என்னுடைய தனிப்பட்ட பிரச்சனையால் என்னால் படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டது. தற்போது நான் பழையபடி படங்களில் நடிக்கலாம் என்று முடிவெடுத்து இருக்கிறேன். அதோடு என் வாழ்க்கையில் இன்னும் ஒரே ஒரு ஆசை மட்டும் தான் உள்ளது. அது நிறைவேறி விட்டால் எனக்கு போதும் வேறு எதுவும் வேண்டாம். மேலும், என்னுடைய கணவர் பாலுமகேந்திரா அவர்களின் முதல் மனைவி தான் அகிலா. பாலுமகேந்திரா அவர்கள் இறக்கும் போது என்னிடம் கடைசியாக கேட்டது,” நீ போய் அகிலா கிட்ட பேசுறியா, அவளை போய் பார்த்திப்பியா” என்று சொன்ன அந்த வார்த்தை எனக்கு இன்னும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

ஐந்து வருடமாக பலமுறை அகிலம்மாவை சந்திக்க முயற்சி பண்ணுகிறேன். ஆனால், இப்போது வரை நடக்கவில்லை. அவர்களுக்கு என் மீது கோபம் இருக்கலாம். மேலும், நான் அகிலம்மாவை பார்த்து” நான் தப்பு தான் பண்ணிட்டேன், என்னை மன்னிக்க மாட்டீங்களா” என்னை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று கேட்கணும் அவ்வளவு தான் என்னுடைய கடைசி ஆசை என்று கூறினார்.

Advertisement