நடிகை அமலா பாலின் தந்தை திடீர் மரணம். சென்னையில் இருந்து சோகத்துடன் கிளம்பிய அமலா பால்.

0
23272
amala paul
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை அமலா பால். இவர் 2009 ஆம் ஆண்டு நீலதமரா என்ற மலையாளப் படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானவர். தமிழில் இவர் சிந்து சமவெளி என்ற படத்தின் மூலம் தான் அறிமுகமானார். ஆனால், அந்த படம் மக்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பின் அமலா பால் மைனா என்ற படத்தில் நடித்திருந்தார். இவருடைய சினிமா பயணத்திற்கு இந்த படம் திருப்புமுனையாக அமைந்தது. அதற்கு பிறகு ஜெயம் ரவியுடன் நிமிர்ந்து நில், அதர்வாவுடன் முப்பொழுதும் உன் கற்பனை, தனுசுடன் வேலையில்லா பட்டதாரி, தளபதி விஜயுடன் தலைவா என தமிழ் சினிமாவில் உள்ள பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து உள்ளார்.

-விளம்பரம்-

- Advertisement -

மேலும், இவர் இந்த தலைவா படம் மூலம் சினிமா உலகில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தார். அந்த படத்தின் இயக்குனர் விஜயை 2014 ஆம் ஆண்டு அமலா பால் அவர்கள் திருமணம் செய்து கொண்டார். பின் இவர்கள் இருவருக்கும் இடையே இருந்த கருத்து வேறுபாடு காரணமாக சில வருடங்களிலேயே பிரிந்தார்கள். அதற்கு பிறகு நடிகை அமலா பால் அவர்கள் சினிமாவில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். கடந்த ஆண்டு இவர் ஆடை என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் மக்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆடை படத்தில் இவருடைய துணிச்சலான நடிப்பை பார்த்து பலர் பாராட்டியும் விமர்சித்தும் உள்ளார்கள். தற்போது நடிகை அமலா பால் “அதோ அந்த பறவை போல” என்ற படத்தில் நடித்து உள்ளார். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் தான் வெளியானது.

இந்த படத்துக்கு சாந்தகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். ஜேக்ஸ் பிஜோய் இசையமைத்து உள்ளார். இந்த படத்தில் ஆஷிஷ் வித்யார்த்தி, சமீர் கோச்சர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து உள்ளனர். இந்த படத்தை கே.ஆர்.வினோத் இயக்கி உள்ளார். இந்நிலையில் நடிகை அமலா பாலின் தந்தை திடீரென்று மரணம் அடைந்தார் என்ற தகவல் சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது. மேலும், இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. தந்தையின் இறப்பு செய்து கேட்டு நடிகை அமலா பால் சென்னையில் இருந்து கிளம்பினார். நடிகை அமலா பாலின் சொந்த ஊர் கேரள மாநிலம் குருப்பம்பாடி. அவரது தந்தை பெயர் பால் வர்கீஸ். இவர் சில நாட்களாகவே உடல்நலக் குறைவால் தனியார் மருத்துவமனையில் நீண்ட நாள் சிகிச்சை பெற்று வந்த உள்ளார்.

-விளம்பரம்-
amala Paul father

நேற்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளார். இதைக் கேட்டு திரையுலகினர் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். அமலா பால் தந்தை பால் வர்கீஸ்ஸின் இறுதி சடங்கு இன்று(ஜனவரி 22) மாலை அவர்களது சொந்த ஊரான குருப்பம்பாடியில் செயின்ட் பீட்டர் மற்றும் செயின் பால் கத்தோலிக் தேவாலயததில் நடைபெறுகிறது. தன் தந்தை இழப்பால் நடிகை அமலாபால் பெரும் சோகத்தில் உள்ளார். மேலும், தென்னிந்திய திரையுலகினர் பலரும் அமலா பாலுக்கு ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement