நதியில் மல்லாக்க படுத்துக்கொண்டு அமலா பால் கொடுத்த போஸ் – மாஸ்டர் நடிகை போட்ட கமன்ட்.

0
3164

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையான அமலா பால் இயக்குனர் ஏ எல் விஜய்யை கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். பின்னர் 2017 ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் பிரிந்தனர். இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட மனஸ்தாபத்தினால் தான் இவர்கள் பிரிந்தனர் என்று கூறப்பட்டது. ஆனால், விவாகரத்திற்கு பின்னரும் இவர்கள் இருவரும் அவரவர் வேலைகளை செய்து வருகின்றனர். நடிகை அமலா பால் தற்போதும் தொடர்ந்து நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இயக்குனர் விஜய் கடந்த மாத,மாதம் 11ம் தேதி ஐஸ்வர்யா என்ற மருத்துவரை திருமணம் செய்து கொண்டார். தனது முதல் கணவர் இரண்டாம் திருமணம் செய்து கொண்டது குறித்து எந்த ஒரு கவலையும் இல்லாமல் இருக்கிறார் நடிகை அமலாபால். இருப்பினும் கடந்த சில காலமாகவே அமலாபால் இரண்டாம் திருமணம் செய்துகொள்ளப் போகிறார் என்ற சில செய்திகளும் கிசுகிசுக்கப்பட்டு வந்த வண்ணம் இருந்தது.

- Advertisement -

அதன் பின்னர் தான் ஒரு நபரை காதலிப்பதாக கூறி அனைவருக்கும் ஷாக் கொடுத்தார் அமலா பால். இப்படி சர்ச்சைக்கு பாஞ்சமே இல்லாத அமலா பால் சமீபத்தில் ஆடை படத்தில் ஆடை இல்லாமல் நடித்து மேலும் தனது பெயரில் சர்ச்சையை ஏற்படுத்திக்கொண்டார். அதன் பின்னர் அம்மணிக்கு பெரும் பிரபலம் கிடைத்துள்ளது.

எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அமலா பால் அடிக்கடி எதாவது சர்ச்சையான மற்றும் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் தண்ணீரில் மிதந்தபடி ஒரு புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார். இந்த புகைப்படத்திற்கு மாஸ்டர் பட நடிகை மாளவிகா மோகன் ‘சூப்பரான போட்டோ’ என்று கமன்ட் செய்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement