47 வயது இயக்குனருக்கு ஜோடியான அமலா பால் – யார்னு தெரிஞ்சா ஷாக்காகிடுவீங்க.

0
1723
- Advertisement -

சமீப காலமாகவே சமூக வலைத்தளங்களில் சர்ச்சை நாயகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை அமலா பால். இவர் தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாகவும் உள்ளார். இவர் 2009 ஆம் ஆண்டு நீலதமரா என்ற மலையாளப் படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். தமிழில் இவர் சிந்து சமவெளி என்ற படத்தின் மூலம் தான் அறிமுகமானார். அதற்கு பிறகு மைனா, நிமிர்ந்து நில், முப்பொழுதும் உன் கற்பனை, வேலையில்லா பட்டதாரி, தலைவா என பல படத்தில் நடித்து உள்ளார்.

-விளம்பரம்-

இவர் இயக்குனர் விஜய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஒரு ஆண்டு கூட பூர்த்தியாக முடிந்திருக்காது பரஸ்பர விவாகரத்து பெற்று பிரிந்தார்கள். கடந்த ஆண்டு விஷ்ணு விஷால் மற்றும் அமலாபால் நடிப்பில் வெளியான ராட்சசன் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதுமட்டுமில்லாமல் இவர் வெப் சீரிஸ்ஸிலும் நடித்து வருகிறார்.

- Advertisement -

அதே போல் இவர் ஆடை என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் மக்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆடை படத்தில் இவருடைய துணிச்சலான நடிப்பை பலர் பாராட்டியும், பலர் விமர்சித்தும் உள்ளார்கள். தற்போது நடிகை அமலா பால் “அதோ அந்த பறவை போல” என்ற படத்தில் நடித்து உள்ளார். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் தான் வெளியானது. தற்போது நடிகை அமலா பால் மலையாளம் மற்றும் தமிழ் மொழி படங்களில் படு பிசியாக நடித்து வருகிறார்.

இப்படி ஒரு நிலையில் நடிகை அமலா பால் 47 வயதான இயக்குனர் மற்றும் நடிகருமான கௌதம் மேனனுக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார். குட்டி லவ் ஸ்டோரி என்ற ஆந்தாலஜி படத்தில் கௌதம் மேனனுக்கு ஜோடியாக அமலாபால் நடித்திருக்கிறார். பாவக் கதைகள் போன்றே நான்கு கதைகளை கொண்ட இந்த படத்தினை நான்கு பகுதிகளாக கௌதம் மேனன், வெங்கட் பிரபு, நலன் குமாரசாமி, விஜய் ஆகிய நான்குபேர் இயக்கி இருக்கிறார்கள். ஏற்கனவே இயக்குனர் கௌதம் மேனன் பாவக் கதைகள் வெப் தொடரில் வந்த ‘வான்மகள்’ என்ற வெப் படத்தில் சிம்ரனுக்கு ஜோடியாக நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement