தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக அமலா பால் இருக்கிறார். தற்போது இவர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் கடாவர். இந்த படத்தை மலையாள இயக்குநர் அனூப் எஸ். பணிக்கர் இயக்கி இருக்கிறார். இதில் நடிகை அமலாபால் உடன் ஹரிஷ் உத்தமன், முனீஸ்காந்த், திரிகன், திரிகுன், வினோத் சாகர், அதுல்யா ரவி, ரித்விகா, நிழல்கள் ரவி, வேலு பிரபாகர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மெடிக்கல் கிரைம் த்ரில்லர் ஜானரில் இந்த படம் வெளியாகி இருக்கிறது. இந்த திரைப்படத்திற்கு ரஞ்சின் ராஜ் இசையமைக்கிறார். இந்த படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் நேரடியாக வெளியாகி இருக்கிறது. பல எதிர்பார்ப்புகளுடன் வெளிவந்திருக்கும் இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்த்ததை விட நன்றாக வந்து உள்ளது.

கடாவர் கதைவிளக்கம் :

படத்தின் தொடக்கமே அடுத்தடுத்து நடக்கும் கொலைகள், திரிலிங் என்று ஆரம்பிக்கிறது. அப்போது பிரபல மருத்துவரான சலீம் ரகுமானை ஒரு மர்ம மனிதன் காரோடு வைத்து எரித்துக் கொலை செய்து விடுகிறார். இது தொடர்பாக போலீஸ் விசாரிக்கிறது. இந்த கொலைக்கு சிறையில் இருக்கும் வெற்றிக்கும் தொடர் இருப்பது விசாரணையில் தெரிய வருகிறது. ஆனால், சிறையில் இருக்கும் வெற்றியால் இந்த கொலையை எப்படி செய்ய முடியும் என்ற குழப்பம் ஏற்படுகிறது. இதை அமலா பால் போலீஸ் உடன் சேர்ந்து கண்டுபிடிக்க முயல்கிறார். இந்த கொலையை செய்ய வெற்றிக்கு உதவிய மர்ம நபர் யார்? இந்த கொலைக்கான காரணம் என்ன? என்பது தான் படத்தின் மீதி கதை. படத்தில் எந்த இடத்திலும் சலிப்பு இல்லாமல் கதையை விறுவிறுப்பாக கொண்டு சென்றிருக்கிறார் இயக்குனர். இந்த படத்தில் தடயவியல் துறை நிபுணரான பத்ரா என்ற கதாபாத்திரத்தில் அமலா பால் நடித்துள்ளார்.

Advertisement

படத்தில் தெறிக்கவிடும் அமலாபால் :-

மேலும், இதுவரை ஏற்றிராத கதாபாத்திரத்தில் அமலாபால் மிரட்டி இருக்கிறார் என்றே சொல்லலாம். இவர் இந்த படத்தின் மூலம் தன்னுடைய வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி ஸ்கோர் செய்திருக்கிறார். அதிலும் பிணத்திற்கு நடுவில் அமலாபால் உட்கார்ந்து சாப்பிடும் காட்சிகள் எல்லாம் வேற லெவல் இருக்கிறது. மற்றும் ஒரு மனிதனின் சடலத்தில் இருந்து கிடைக்கும் ஒரு எலும்பை வைத்து இது ஆணா ?பெண்ணா ? மேலும் என் சொந்தக்காரர் யார் அவர் எப்படி இறந்திருப்பார் என்ன கண்டுபிடிக்கும் அமலாபாலின் வசனங்கள் எல்லாம் திரைப்படத்தில் தெறிக்க விடுகின்றனர். இந்த படம் கண்டிப்பாக அமலாபாலுக்கு மீக பெரிய கம்பேக் திரைப்படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

படத்தின் வெற்றிக்கு காரணமானவை :-

பிணங்கள், சவக்கிடங்கு, கொடூரமான கொலைகள் என ஒவ்வொரு நிமிடமும் திக் திக் பாணியிலேயே கதை சென்றுகொண்டிருக்கிறது. முதல்பாதியில் கொலைக்கான காரணம் எனப் புரியாமல் கதை நகர்ந்தாலும் இரண்டாம் பாதியில் தெளிவான விளக்கத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர். பின்னணி இசையும், ஒளிப்பதிவும் படத்திற்கு பக்கபலமாக இருக்கிறது. படத்தின் பிற நடிகர்களும் தங்களுக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள். போலீஸுடன் கொலையாளியை தேடும் அமலாபால் இறுதியில் கண்டுபிடித்தாரா என்பதே படத்தின் சஸ்பென்ஸ். திரில்லிங்க்கு தேவையான காட்சிகளை இயக்குனர் கச்சிதமாக கொடுத்திருக்கிறார். படம் பார்க்கும் 2 மணி நேரம் நம் கவனத்தை வேறு எங்கும் திசை திருப்பாமல் டைரக்ட்டர் படத்தின் மீதே இருக்கும் படி செய்துள்ளார்.

Advertisement

பிரேத பரிசோதனையை நேரடியாக பார்த்த அமலாபால் :-

இந்த படத்தில் சற்று வித்தியாசமாக கடாவர் என்ற பெயருக்கு அர்த்தத்தை அமலா பால் படத்தின் முடிவில் நமக்கு விளக்கி கூறுவார். சமீபத்தில் இந்த பட சம்பந்தமாக பேட்டி அளித்திருந்த அமலாபால் இந்த படத்தில் பிரேத பரிசோதனை செய்யும் டாக்டர் கதாபாத்திரத்தில் நான் நடிக்க தயாரானவுடன் நானும் இந்த படத்தின் இயக்குனரும் உண்மையாகவே பல மருத்துவமனைகளுக்கு நேரடியாக சென்று பிரேத பரிசோதனைகளை செய்வதை நேரடியாக பார்த்தோம். இந்த படத்தின் மூலமாக நான் பல புதிய விஷயங்களை தான் கற்றுக் கொண்டதாகவும் அதுமட்டுமில்லாமல் பிரேத பரிசோதனையை செய்வதை நேரடியாக பார்த்தது அதிர்ச்சியாக இருந்ததாகவும் தன் கடாவர் படத்தின் அனுபவங்களை அமலா பால் பகிர்ந்திருந்தார்.

Advertisement
Advertisement