தென்னிந்திய சினிமாவில் 14 ஆண்டு காலமாக முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சமந்தா. இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இந்தியாவின் பல மொழி படங்களில் நடிகை சமந்தா நடித்திருந்தாலும் தமிழ் மற்றும் தெலுங்கில் தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இதனிடையே சமந்தா அவர்கள் கடந்த 2017 ஆம் ஆண்டு நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இருவரும் தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான ஜோடிகளாக வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சமந்தா -நாகா சைதன்யா இருவரும் பிரிய இருப்பதாக கடந்த 2021 ஆம் ஆண்டு சோசியல் மீடியாவில் அறிவித்து இருந்தார்கள். இது ரசிகர்களுக்கு மட்டும் இல்லாமல் பிரபலங்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. மேலும், இவர்களின் பிரிவு குறித்து சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகளும், கருத்துக்களும் எழுந்த வண்ணம் இருந்தது. அதோடு பிரிவிற்கு பின் இருவரும் தங்களின் அதோடு அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள்.

Advertisement

சமந்தா-நாக சைதன்யா பிரிவு:

கடந்த ஆண்டு சமந்தா நடித்த யசோதா, சாகுந்தலம் படங்கள் எதிர்பார்த்த வெற்றி கொடுக்கவில்லை. பின் இவர் நடித்த குஷி படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இதை அடுத்து இவர் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அதோடு கடந்த ஆண்டு இவர் மயோசிட்டிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து இருந்தார். சமீபத்தில் தான் இவர் குணம் ஆகி கேரியரில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் விருது விழாவில் சமந்தா அணிந்திருந்த ஆடை தான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து இருக்கிறது.

அதாவது, சமந்தா தன்னுடைய திருமணத்தின் போது வெள்ளை கவுன் ஒன்றை அணிந்திருந்தார். தற்போது அந்த ஆடையை தான் தன்னுடைய டிசைனரிடம் கொடுத்து கருப்பு நிறமாக மாற்றி அமைத்திருக்கிறார். இது தொடர்பாக சமந்தாவின் திருமண கவுனை வடிவமைத்த டிசைனர் கிரேஷா பஜாஜ் இன்ஸ்டால் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், நாங்கள் சமந்தாவுடன் பணிபுரிவதை விரும்புகிறோம். அவருக்கு ஒரு புதிய நினைவை உருவாக்கவும் மற்றொரு கதை சொல்லவும் தான் உதவினோம். அழகு எப்போதும் இருக்கும்.

Advertisement

அது ஒவ்வொரு நாளும் ஒரு புதிய வடிவத்தை கொடுக்கும் என்று பதிவிட்டு இருக்கிறார். மேலும், இந்த விருது விழாவில் விருது வாங்கிய பிறகு சமந்தா, நாம் இனிமேல் நிலைத்தன்மையை புறக்கணிக்க முடியாது. அது ஒரு விருப்பத்தேர்வாக கட்டத்தை கடந்து விட்டோம். நான் அணிந்திருக்கும் உடை ரொம்ப திறமையான வடிவமைப்பாளர் கிரிஜா செய்தது. இவருடைய மறு வடிவமைப்பு அருமையாக இருக்கிறது.

Advertisement

அது எனக்கு முக்கியமற்றதாக தோன்றினாலும் என்னுடைய பழைய ஆடைகளை மீண்டும் பயன்படுத்துவது என்னுடைய பழக்க வழக்கங்களை மாற்றுவதற்கும் என்னுடைய வாழ்க்கை முறையை மிகவும் நிலையானதாக மாற்றுவதற்கும் நான் எடுக்கும் பல முடிவுகளில் ஒன்று என நினைக்கிறேன். ஒவ்வொரு சின்ன செயலும் சிறிய தீர்க்கமான நடவடிக்கையும் முக்கியமானது. உங்கள் அனைவரையும் இது போன்ற சிறிய முயற்சிகளை மேற்கொள்ள கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

Advertisement