இன்னும் கொஞ்சம் ஃப்ரீ பண்லாம்ல – அமலா பாலின் லேட்டஸ்ட் கிளாமரை கண்டு ஷாக்கான ரசிகர்கள்.

0
12158
amala paul
- Advertisement -

சமீப காலமாகவே சமூக வலைத்தளங்களில் சர்ச்சை நாயகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை அமலா பால். இவர் தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாகவும் உள்ளார். இவர் 2009 ஆம் ஆண்டு நீலதமரா என்ற மலையாளப் படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். தமிழில் இவர் சிந்து சமவெளி என்ற படத்தின் மூலம் தான் அறிமுகமானார். அதற்கு பிறகு மைனா, நிமிர்ந்து நில், முப்பொழுதும் உன் கற்பனை, வேலையில்லா பட்டதாரி, தலைவா என பல படத்தில் நடித்து உள்ளார்.

-விளம்பரம்-

இவர் இயக்குனர் விஜய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஒரு ஆண்டு கூட பூர்த்தியாக முடிந்திருக்காது பரஸ்பர விவாகரத்து பெற்று பிரிந்தார்கள். கடந்த ஆண்டு விஷ்ணு விஷால் மற்றும் அமலாபால் நடிப்பில் வெளியான ராட்சசன் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதுமட்டுமில்லாமல் இவர் வெப் சீரிஸ்ஸிலும் நடித்து வருகிறார்.

இதையும் பாருங்க : ஈர புடவையில் போட்டோ ஷூட் பண்ணதுக்கு இதான் காரணம் – தண்ணியில் தவறி விழுந்துள்ள வீடியோவை பகிர்ந்த ரித்திகா.

- Advertisement -

அதே போல் இவர் ஆடை என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் மக்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆடை படத்தில் இவருடைய துணிச்சலான நடிப்பை பலர் பாராட்டியும், பலர் விமர்சித்தும் உள்ளார்கள். தற்போது நடிகை அமலா பால் “அதோ அந்த பறவை போல” என்ற படத்தில் நடித்து உள்ளார். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் தான் வெளியானது.

தற்போது நடிகை அமலா பால் மலையாளம் மற்றும் தமிழ் மொழி படங்களில் படு பிசியாக நடித்து வருகிறார். தற்போது இவர், தெலுங்கில் Kudi Yedamaithe என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். சமீபத்தில் இந்த வெப் சீரிஸ்சின் ட்ரைலர் லான்சுக்கு படு கவர்ச்சியான உடையில் சென்று இருந்தார். இப்படி ஒரு நிலையில் மீண்டும் உள்ளாடை தெரியும்படி படு கவர்ச்சியான உடையில் ப்ரோமோஷனுக்கு சென்றுள்ளார். இதற்கு ரசிகர்கள் பலரும் கண்ட மேனிக்கு கமன்ட் செய்ய, ரசிகர் ஒருவர் ஏங்க பாதிதாங்க தெரியுது.. இன்னும் கொஞ்சம் ஃப்ரீ பண்லாம்ல என்று பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement