இரண்டாம் திருமணம் செய்துகொள்ள போகிறார் நடிகை அமலாபால்..!மாப்பிள்ளை இவராக கூட இருக்கலாம்.

0
669
Amalapaul

தமிழில் “மதராசபட்டினம்’ , ‘தெய்வ திருமகள்’ போன்ற வெற்றி படங்களை இயக்கிவர் இயக்குனர் ஏ எல் விஜய். மேலும், இவர் இயக்கிய ‘தெய்வ திருமகள், தலைவா’ போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்த அமலா பாலுக்கும், ஏ எல் விஜய்க்கும் காதல் மலர்ந்தது. 2014 ஆம் நடைபெற்ற இவர்களது திருமணம் மூன்றே ஆண்டுகளில் விவகாரத்தில் முடிந்தது.

Amalapaul

இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட மனஸ்தாபத்தினால் தான் இவர்கள் பிரிந்தனர் என்று கூறப்பட்டது. ஆனால், விவாகரத்திற்கு பின்னரும் இவர்கள் இருவரும் அவரவர் வேலைகளை செய்து வருகின்றனர். நடிகை அமலா பால் தற்போதும் தொடர்ந்து நடித்து வருகிறார்.

இந்நிலையில் 27 வயதாகும் அமலா பால் இப்போது இரண்டாவது திருமணத்திற்கு தயாராகி வருகிறார் என்ற சில செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து பேசியுள்ள நடிகை அமலா பால் ‘நானாக முடிவெடுத்த எனது முதல் திருமணம் சரியாக அமையவில்லை. ஆகையால், எனது இரண்டாவது திருமணம் பற்றி முடிவெடுப்பதை எனது தாய் தந்தையின் முடிவுக்கே விட்டுவிட்டேன்.தனது பிள்ளைக்கு எப்படிப்பட்ட மாப்பிள்ளை அமைய வேண்டும் என்பதில் அவர்களுக்கு இல்லாத அக்கறையா? ஆகையால், அவர்கள் சொல்லும் ஒருவரை திருமணம் செய்து கொள்வேன்’என்று தெரிவித்துள்ளார்.

Amalapaul

மேலும், நடிகை அமலா பால் இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ளும் நபர் யாரென்றுக்கு தெரியாத நிலையில் சமீபத்தில் நடிகை அமலா பால் ஆணுடன் மிகவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. எனவே, நடிகை அமலா பால் இரண்டாம் திருமணம் செய்துகொள்ளபோகும் நபர் இவராக கூட இருக்கலாம் என்று கிசுகிசுக்கபடுகிறது.