செம்மர தூண்,பழமை மாறாத டிசைன்,ராதா, அம்பிகா பிறந்த கேரளா வீடு – Home Tour Video

0
471
- Advertisement -

நடிகை ராதாவின் பழமை மாறாத கேரள வீட்டின் புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் 90 காலகட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர் ராதா. இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழி படங்களில் நடித்திருக்கிறார். மேலும், இவர் கிட்டத்தட்ட 100 படங்களுக்கு மேல் கதாநாயகியாகவே நடத்தி இருக்கிறார். அதோடு 80, 90 காலகட்டத்தில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக ராதா திகழ்ந்தார்.

-விளம்பரம்-

இவருடைய சகோதரி நடிகை அம்பிகாவும் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் தான். அதோடு ராதா அவர்கள் சிவாஜி, ரஜினி, கமல், பிரபு, சத்யராஜ் என பல உச்ச நட்சத்திரங்களுக்கு ஜோடியாக நடித்து இருக்கிறார். இவர் நடிப்பு மட்டுமில்லாமல் நடனம், வசனம் என தனித்துவமான திறமையால் ரசிகர்கள் மத்தியில் கவர்ந்திருக்கிறார். இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. பின் சினிமா பட வாய்ப்பு குறைய தொடங்கியவுடன் ராதா சின்னத்திரை பக்கம் சென்று விட்டார்.

- Advertisement -

ராதா குடும்பம்:

இவர் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று வருகிறார். இதனிடையே ராஜசேகரன் நாயர் என்பவரை ராதா திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கார்த்திகா, விக்னேஷ், துளசி என்று மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள். அதில் மூத்த மகளான கார்த்திகா தெலுங்கில் கடந்த 2009ஆம் ஆண்டு வெளியான ஜூஸ் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று பல்வேறு மொழிகளில் நடித்து இருந்தார்.

ராதா மகள் குறித்த தகவல்:

இருந்தாலும், இவருக்கு சொல்லிக் கொள்ளும்படி படவாய்ப்புகள் அமையவில்லை. இதனால் இவர் சினிமாவில் இருந்து விலகி விட்டார். பின் ராதாவின் இளைய மகள் துளசியும் நடிகையாக இருந்தார். இவர் 2013 ஆம் ஆண்டு புகழ்பெற்ற இயக்குனர் மணிரத்தினம் இயக்கிய ‘கடல்’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். அதனை தொடர்ந்து இவர் 2014 ஆம் ஆண்டு ரவி கே.சந்திரன் இயக்கிய ‘யான்’ படத்தில் நடித்து இருந்தார். இந்த படம் பெரிய அளவில் வெற்றி கிடைக்கவில்லை.

-விளம்பரம்-

ராதாவின் மகள் திருமணம்:

அதற்கு பின் துளசி நாயர் சினிமாவில் இருந்து விலகி படிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
பின் சமீபத்தில் நடிகை ராதாவின் மூத்த மகள் கார்த்திகா நாயருக்கு திருமண நிச்சியதார்த்தம் நடைபெற்று இருந்தது. மேலும் ராதாவின் மூத்த மகள் கார்த்திகாவுக்கு சில தினங்களுக்கு முன்புதான் கேரளாவில் உள்ள நட்சத்திர ரிசார்ட்டில் பிரம்மாண்டமாக திருமணம் நடந்தது. இதில் பிரபலங்கள் பலருமே கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்கள். கார்த்திகாவின் திருமண புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் வெளியானதை தொடர்ந்து பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள்.

ராதாவின் பூர்வீக வீடு:

இந்த நிலையில் நடிகை ராதாவின் பூர்வீக வீடு குறித்த புகைப்படம் தான் தற்போது வெளியாகியிருக்கிறது. அதாவது, நடிகை ராதா- அம்பிகா இருவரும் சகோதரிகள் என்பது அனைவரும் அறிந்ததே. இவர்கள் கேரளாவில் தான் பிறந்து வளர்ந்தார்கள். இவர்களுடைய வீடு கேரள பாரம்பரிய முறையில் பழமை மாறாமல் இருக்கிறது. இவர்களுடைய பாரம்பரிய வீட்டின் வீடியோ தான் வெளியாகியிருக்கிறது. அதில் இவர்கள் தங்களுடைய குடும்பத்துடன் சேர்ந்து உணவு உண்ணும் காட்சியும் இடம்பெற்றிருக்கிறது.

Advertisement