விமான விபத்தில் இருந்து தப்பிய ரோஜா – அவரே வெளியிட்ட ஷாக்கிங் வீடியோ.

0
503
roja
- Advertisement -

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை ரோஜா. இவர் தற்போது படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் இவர் ஆந்திர அரசியலில் முழுநேரமாக களமிறங்கியிருக்கிறார். ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸில் எம்எல்ஏவாக ரோஜா இருக்கிறார். இந்நிலையில் இன்று ரோஜா அவர்கள் ராஜமுந்திரியில் இருந்து திருப்பதிக்கு விமானத்தில் பயணம் செய்துள்ளார். அப்போது விமானம் திருப்பதி விமான நிலையத்தை அடைந்த போது தரை இறங்குவதில் கொஞ்சம் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

-விளம்பரம்-

பின் விமானத்தில் விபத்து ஏற்படும் சூழல் உருவானதால் விமானி சாமர்த்தியமாக செயல்பட்டு விமானத்தை பெங்களூருவை நோக்கி திரும்பியுள்ளார். இந்நிலையில் இது குறித்து ரோஜா வீடியோ வெளியீட்டு கூறியிருப்பது, நான் ராஜமுந்திரியில் இருந்து திருப்பதி நோக்கி விமானத்தில் பயணம் சென்றிருந்தேன். தரையிறங்கும் சமயத்தில் திடீரென விமானத்தில் டெக்னிக்கல் கோளாறு ஏற்பட்டிருக்கிறது. விமானி நிதானமாக செயல்பட்டு விமானத்தை பெங்களூருக்கு திருப்பி பத்திரமாக தரையிறக்கி உள்ளார் என்று கூறி உள்ளார்.

- Advertisement -

தற்போது இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் ஜெட் வேகத்தில் பரவி வருகிறது. மேலும், இந்த தகவல் ரசிகர்கள், பிரபலங்கள் மத்தியிலும் பதைபதைப்பை ஏற்படுத்தி இருந்தாலும் நிம்மதியை கொடுத்திருக்கிறது. இதேபோல் சமீபத்தில் இந்திய முப்படைகளின் ராணுவ தளபதி பிபின் ராவத் சென்ற விமானம் குன்னூர் அருகே எதிர்பாரதவிதமாக விபத்தில் சிக்கி இருந்தது. இந்த கோர விபத்தில் பிபின் ராவத் மற்றும் அவருடைய மனைவி உள்ளிட்ட 13 பேர் அநியாயமாக உயிர்த்தியாகம் செய்திருந்தார்கள்.

மேலும், குரூப் கேப்டன் வருண் சிங் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விமான விபத்து ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கிவிட்டது . இந்த வடுவில் இருந்து மக்கள் மீளா நிலையில் நடிகை ரோஜா வெளியிட்ட இந்த பதிவு மக்கள் மத்தியில் கவலை அடையச் செய்திருக்கிறது. அதுமட்டுமில்லாமல் தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்த சௌந்தர்யாவும் விமான பயணத்தில் தான் அநியாயமாக உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement